கவிஞர் இன்குலாப் அவர்களுக்கு சாகித்திய அகாடமி விருது ஏற்க குடும்பத்தினர் மறுப்பு |
|
|
|
திங்கட்கிழமை, 01 ஜனவரி 2018 11:10 |
இந்தியாவில் 24 மொழிகளில் வெளி யாகும் சிறந்த இலக்கியப் படைப்பு களைத் தேர்வு செய்து "சாகித்ய அகாடமி' சார்பில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படு கின்றன. அதன்படி, தமிழ் மொழிக்கான விருதுக்கு கவிஞர் இன்குலாப் தேர்வு செய்யப் பட்டுள்ளார்.
தஞ்சாவூர் "அன்னம்' பதிப்பகம் வெளியிட்ட கவிஞர் இன்குலாப் பின் "காந்தள் நாட்கள்' என்ற கவிதைத் தொகுப்புக்காக அவருக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. அவ்விருதை ஏற்க இன்குலாப் குடும்பத்தினர் மறுத்துவிட்டனர்.
கவிஞர் இன்குலாப்புக்கு வழங்கப்படவுள்ள "சாகித்ய அகாடமி' விருதை ஏற்கப் போவதில்லை என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, அவரது மகள் மருத்துவர் ஆமினா "தி இந்து'-விடம் கூறியதாவது: எங்கள் அப்பா இத்தகைய விருதுகள் வரும் என எதிர்பார்த்ததில்லை. விருதுகள் கிடைக்கவில்லை என வருத்தப்பட்டதும் இல்லை.
தனது எழுத்துகளுக்கான விசாரணைகள், எதிர்ப்புக் குரல்கள், கண்டனங்கள் போன்றவற்றைதான் அவர் உண்மையான விருதாக கருதினார். ஒருவேளை இதுபோன்ற விருதுகள் கிடைத்தால் ஏற்க மாட்டேன் என அவர் வாழும்போதே எங்களிடம் கூறியிருக்கிறார். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள "சாகித்ய அகாடமி' விருதை ஏற்பதில்லை என அவரது எண்ணப்படியே குடும்பத்தினர் நாங்கள் முடிவு செய்துள்ளோம். |