முனைவர் மலையமானின் தமிழ் ஆய்வு முடிவுகள் PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 01 ஜனவரி 2018 11:58

1. கந்தருவர் என்பவர் தேவர் இனத்தவர் என்பது தவறு. வடபுலத்தில் உலவிய தொல்பழம் யாழ்ப்பாணர்களே கந்தருவர்.
2. ஆதிகாலத்து மாபெரும் வீரனாகிய முருகன் இறைவனாக வணங்கும் நிலையைப் பெற்றான்.
3. தொடக்க நிலையில் தமிழில் 51 எழுத்துக்கள் இருந்தன. பின்பு அது 31 எழுத்துகளைக் கொண்டதாகத் திட்டமிட்டு நிறுவப்பட்டது. குறில், நெடில், மெய் எழுத்தின் மூன்று இனங்கள் ஆகியவையும் திட்டமிட்டு அமைக்கப்பட்டன.
4. மூன்று இன முக்கிய மெய் எழுத்துக்களுடன் (த், ம், ழ்) மூன்று முக்கிய உயிர் எழுத்துகளை (அ, இ, உ) இணைத்துத் "தமிழு' என்று மொழிக்குப் பெயர் சூட்டப்பட்டது. பின்பு இறுதி உகரம் மறைந்தது. தமிழ் என்று சொல் நிலைத்தது.
5. உலக மொழிகளில் தமிழில் தான் ஓரெழுத்துச் சொற்கள் அதிகமாக உள்ளன (64 சொற்கள்).

6. சொல் சுருக்கத்திற்காகத் தமிழின் சில சொற்களில் இரண்டு குறில் எழுத்துக்கள் அடுத்தடுத்து வரும்போது, முதல் குறில் நெடிலாகும். இரண்டாம் குறில் மறையும். )எடு அகலமரம் - ஆலமரம், மலையமகன் - மலையமான்).
7. மேலே சொன்ன விதிமுறைப்படி சில வினைச் சொற்களின் விகுதிகள் தோன்றின (அவன் - ஆன், அவள் - ஆள், அவர் - ஆர்).
8. தமிழ் என்ற சொல்லுக்குப் பத்துப்பொருள்கள் உள்ளன. அவை, இனிமை, நீர்மை, அகப்பொருள், வீரம், இறைமை, சைவசமயம், படைவீரர், நாடு, வேந்தர், தமிழர் என்பன.
9. வீரசோழியம் எழுதிய புத்தமித்திரர் "ழ' என்ற தமிழின் சிறப்பெழுத்தை அழிக்க முயற்சி செய்தார்.
10. கிரேக்க மொழியை விட தமிழ் உயர்வு நிலை உடையது.
11. வள்ளலார் என்பதைப் போல், திருவள்ளுவர் என்பது காரணத்தால் அமைந்த சிறப்புப் பெயர்.
12. திருவள்ளுவர் நூற்றுக்கும் மேற்பட்ட புதுச்சொற்களைப் படைத்துள்ளார்.
13. திருக்குறளின் முதல் அதிகாரம் இறைமைச் சிறப்பு (அ) இறைமை வழிபாடு என்று திருவள்ளுவரால் பெயர் தரப்பட்டிருக்கலாம்.
14. திருவள்ளுவர் தன் நூலுக்கு முப்பால் என்று பெயர் சூட்டியிருப்பார். திருக்குறள் என்பது பிற்காலத்தில் தரப்பட்ட சிறப்புப் பெயர்.
15. திருவள்ளுவர் இந்தியா முழுவதும் பயணம் செய்திருக்கிறார்.
16. திருவள்ளுவர் பொது உடைமைக் கருத்துடையவர்.
17. திருவள்ளுவர் கணிதத்துறை வல்லுநர்.
18. தொல்காப்பியரின் காலம் கி.மு. 1000க்கும் முற்பட்டது.
19. தமிழ் சுருக்க நிலை கொண்ட மொழி.
20. ஒலிச்சீர்மை, சொற்சுருக்கம், பொருள் மாறுபாடு, உலக வழக்கை ஏற்றல் ஆகிய 4 காரணங்கள் மொழிப் புணர்ச்சியின் வழிமுறைகளாகும்.
21. தொல் பழங்காலத்தில் மணமக்களை வாழ்த்துவதற்குச் செந்நெல்லே பயன்படுத்தப்பட்டது. பின்பு நெல்லுக்குப் பதிலாக மஞ்சள் அரிசி தூவும் பழக்கம் வந்தது.
22. தமிழ் மன்னர்கள் உழவர்களில் சிறந்தவருக்குக் காவிதி என்ற பட்டம் தந்தனர் (கா - (சமுதாயத்தைக் காப்பாற்று) வீரரில் சிறந்தவருக்கு ஏனாதி என்ற பட்டம் தந்தனர். (ஏ - (பகைவரைக் கொல்லும் அம்பு) வணிகரில் சிறந்தவருக்கு எட்டி என்ற பட்டம் தந்தனர். (எட்டி - எட்டம் - தொலை தூரம் சென்று வணிகம் புரிந்தவர்) எட்டி பின்பு செட்டியாகத் திரிந்தது. இது கன்னட மொழியில் ஷெட்டி என்றானது.
23. கலைவடிவம் தரப்பட்ட நடுகல்லே சிவலிங்கம்.
24. தமிழ்ச்சொல்லான சிந்து என்பதிலிருந்து இந்தியா என்ற பெயர் வந்தது. (சிந்து - ஆறு).
25. சிந்திமொழி, தமிழின் மகளான மற்றொரு திராவிட மொழி.

- முனைவர் மலையமான்.

 
காப்புரிமை © 2018 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.