மரு. செ.நெ. தெய்வநாயகம் 75ஆவது பிறந்த நாள் விழா PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 13 ஜனவரி 2018 12:39

26-11-17 அன்று சென்னை தியாகராய நகர் மேல்நிலைப் பள்ளியில் மருத்துவர் செ.நெ. தெய்வநாயகம் அவர்களின் 75ஆவது பிறந்த நாள் விழா மற்றும் ஆவணப் படத் தொடக்க விழா நடைபெற்றது.

திருமதி. சுபா. தெய்வநாயகம் அவர்கள் திருவிளக்கேற்றி விழாவினைத் தொடக்கி வைத்தார். மரு. ப. செல்வ சண்முகம் வரவேற்புரை ஆற்றினார். அதன்பின் 

ஆவணப்படம் தொடக்கம் நடைபெற்றது.

முனைவர் வீ. வசந்திதேவி, முனைவர் க.ப. அறவாணன், மரு. பூ.கோ. பாஸ்கர், முனைவர் ந. செல்வராசன், முனைவர் ச.சீமன் நாராயணன், மரு.கு. சிவராமன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

திரு.இரா. நல்லகண்ணு, பழ.நெடுமாறன், உ. சகாயம் இ.ஆ.ப., ஆகியோர் சிறப்பரையாற்றினர். விழாவின் நிறைவின் போது அறுசுவை விருந்து நடைபெற்றது. ஆசிரியர்களும், மாணவர்களும் திரளான மக்களும் விழாவில் பங்கேற்றனர்.

 
காப்புரிமை © 2018 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.