"பொலிவுறு நகர்'' புதுச்சேரி PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 13 ஜனவரி 2018 13:00

புதுச்சேரியின் "பொலிவுறு நகர்'' (ஸ்மார்ட் சிட்டி) குறியீட்டு முத்திரைக்கு நடுவணரசின் பரிசு கிடைத்திருப்பது மகிழ்ச்சிக்குரிய செய்திதான் என்றாலும், திட்டத்தின் அடையாளமாக அமைக்கப்பட்ட சின்னத்தில், "புதுச்சேரி'' என்னும் தற்காலப் பெயரைப் பொறிப்பது தானே பொருத்தமாக இருந்திருக்கும்.

 

"போன்தி ஷேரி'' என்னும்  பிரஞ்சுப் பெயர் அக்கால அடிமை வாழ்வை மீண்டும் வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக அமைந்து விடாதா? பிரஞ்சுக்காரர் ஆட்சியில் நடந்த ஒரு பிழையை நாம்  மீண்டும் செய்ய வேண்டுமா? அதனால்தானே தூய்ப்ளெக்சு உருவச்சிலையை அகற்றிவிட்டு அவ்விடத்தில் பாரத நாட்டின் முதல் தலைமையமைச்சர் நேருவின்  உருவச்சிலையை அமைத்தோம்.ஆகவே, புதுச்சேரி மக்கள் விரும்புகிற வகையில், "புதுச்சேரி'' என்று தமிழில் எழுதி, நாம் விடுதலை அடைந்த நாட்டில் வாழ்கிறோம் என்னும் உணர்வை ஏற்படுத்தும்  வகையில் மேற்கண்ட மாற்றங்களைச் செய்து சின்னத்தை வெளியிட வேண்டுமென்று, புதுவை மாநிலத் தமிழர் தேசிய முன்னணிக் கட்சி புதுவை மக்களின் சார்பாக  புதுவை அரசை வேண்டிக் கொள்கிறது.

துரை. மாலிறையன்
தலைவர்,  தமிழர் தேசிய முன்னணி (புதுச்சேரி)

 
காப்புரிமை © 2018 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.