தஞ்சையில் நூல் அறிமுக விழா |
|
|
|
சனிக்கிழமை, 13 ஜனவரி 2018 13:03 |
10-01-2018 புதன்கிழமை மாலை 5 மணிக்கு தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் பழ. நெடுமாறன் எழுதிய இரு நூல்களின் அறிமுக விழா நடைபெற்றது. முள்ளிவாய்க்கால் இலக்கிய முற்றத்தின் சார்பில் நடைபெற்ற இவ்விழாவில் பங்கேற்றோர் அனைவரையும் பேரா. பாரி வரவேற்றார்.
்உரிமைகளை நிலைநிறுத்திய உன்னதத் தீர்ப்புகள்' நூலின் அறிமுக விழாவிற்கு மூத்த வழக்கறிஞர் தஞ்சை அ. இராமமூர்த்தி அவர்கள் தலைமை தாங்கினார். வழக்கறிஞர்கள் அ. நல்லதுரை, வெ. ஜீவக்குமார் ஆகியோர் நூல் குறித்து ஆய்வுரை வழங்கினர். கோ. அன்பரசன், சு. பழனிராசன் ஆகியோர் நூலினைப் பெற்றுக்கொண்டனர்.
"உருவாகாத இந்தியத் தேசியமும் - உருவான இந்து பாசிசமும்' நூலின் அறிமுக விழாவிற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஜி.கே. நிஜாமுதின் தலைமை தாங்கினார். ஐயனாபுரம் சி . முருகேசன் முன்னிலை வகித்தார். நூலினை அறிமுகம் செய்து பேரா. த. செயராமன் ஆய்வுரை நிகழ்த்தினார். இரா. திருஞானம், பழ. இராசேந்திரன், பா. இறையெழிலன் ஆகியோர் நூலினைப் பெற்றுக்கொண்டனர். பழ. நெடுமாறன் ஏற்புரை நிகழ்த்தினார். பொன். வைத்தியநாதன் நன்றியுரை வழங்கினார் |