2018ஆம் ஆண்டு பிப்ரவரி 23ஆம் நாள் வெள்ளிக்கிழமை அன்று நாகை மாவட்ட தமிழர் தேசிய முன்னணியின் சார்பில் தமிழர் உரிமை மீட்பு & தமிழக இயற்கை வளம் காப்பு” மாநாடு மயிலாடுதுறை கோவிந்தம்மாள் திருமண கூடத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
தமிழர் தேசிய முன்னணியின் மறைந்த மூத்தப் பொதுச்செயலாளர் கா. பரந்தாமன் அவர்களின் நினைவாக மாநாட்டு அரங்கிற்கு அவர் பெயர் சூட்டப்பட்டிருந்தது. பல்லாயிரக்கணக்கான தோழர்கள், மாநாட்டில் பங்கேற்றனர். மாநாட்டினையொட்டி தமிழர் தேசிய முன்னணியின் இரு வண்ண கொடிகள், பதாகைகள், சுவரொட்டிகள், சுவரெழுத்துகள் ஆகியவற்றால் மயிலாடுதுறை நகரம் முழுவதும் புதுமைப் பொலிவுடன் திகழ்ந்தது. சிற்றுந்துகளிலும், மகிழுந்துகளிலும் ஏராளமான தோழர்கள் வந்து குவிந்தனர். மாநாட்டின் தொடக்கத்தில் சமர்ப்பா குமரன் குழுவினரின் தமிழிசை எழுச்சி நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து கடலூர் மாவட்ட த.தே.மு. தலைவர் கி.செ. பழமலை முன்னணியின் கொடியினை ஏற்றுவித்தார். வந்திருந்தோர் அனைவரையும் நாகை மாவட்ட த.தே.மு. தலைவர் பேரா. இரா. முரளிதரன் வரவேற்றார். தஞ்சை மாவட்ட த.தே.மு. தலைவர் பொன். வைத்தியநாதன் தொடக்கவுரையாற்றினார். மகளிர் - இளைஞர் - மாணவர் - கருத்தரங்கு த.தே.மு.வின் மாநில இளைஞரணி அமைப்பாளர் கா. தமிழ்வேங்கை இக்கருத்தரங்கிற்குத் தலைமை தாங்கினார். த.தே.மு.வின் மாநில மாணவரணி அமைப்பாளர் செ. செயப்பிரகாசு, நாகை மாவட்ட மகளிரணி அமைப்பாளர் இரா. இராசேசுவரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில மகளிரணி அமைப்பாளர் செஞ்சி சாய்ரா, விடுதலை சுதா, இரா. மாதவன், கோ. ஆறுமுகம், சா. ஆன்யதர்ஷினி, வழக்கறிஞர் சபேசன், சு. செம்மொழி ஆகியோர் உரையாற்றினர். இந்நிகழ்ச்சியின் நெறியாளராக கவிஞர் இரா. பூபதி செயலாற்றினார். தற்காப்புக் கலை நிகழ்ச்சி பிற்பகல் 1 மணி முதல் 2 மணி வரை மாணவரணியின் சார்பில் சிலம்பாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. மக்கள் அதைக் கண்டு களித்துப் பாராட்டினர். தமிழக வளம் காப்பு & க ருத்தரங்கு பிற்பகல் 2 மணி முதல் 4 மணிவரை நடைபெற்ற இக்கருத்தரங்கிற்கு திருவாரூர் மாவட்ட த.தே.மு. தலைவர் மரு. இரா. பாரதிசெல்வன் தலைமை தாங்கினார். த.தே.மு.வின் மாநில நிர்வாகிகளான ம. பொன்னிறைவன், தி.ம. பழனியாண்டி, ச.தா. முத்துக்கிருஷ்ணன் ஆகியோர் உரையாற்றினர். இந்நிகழ்ச்சியை மாரி. பன்னீர்செல்வம் நெறிப்படுத்தினார். காவிரிப் படுகையைப் பேரழிவுக்குள்ளாக்கும் மீத்தேன் - பெட்ரோல் - கெமிக்கல் திட்டங்கள்” என்ற தலைப்பில் பேரா. இரா. முரளிதரன், கதிர்வீச்சு அபாயம் தரும் அணுஉலைகள்” என்ற தலைப்பில் பா. சுகுமாரன், காவிரி உள்ளிட்ட நீர்வள உரிமைகளை இழக்கும் தமிழகம்” என்ற தலைப்பில் ச. கலைச்செல்வன் ஆகியோர் உரை நிகழ்த்தினர். தமிழர் உரிமை மீட்பு கருத்தரங்கம் மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை நடைபெற்ற இக்கருத்தரங்கிற்கு த.தே.மு. வின் மாநிலப் பொதுச்செயலாளர் ந.மு. தமிழ்மணி தலைமை தாங்கினார். அரியலூர் மாவட்டத் தலைவர் இர. அரங்கநாதன் , கரூர் மாவட்டத் தலைவர் சி. செந்தில்நாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழர் அரசியல் உரிமைகள் மீட்பு”என்ற தலைப்பில் தலைமை நிலையப் பொதுச் செயலாளர் செ.ப. முத்தமிழ்மணி, தமிழர்களின் சமூக உரிமைகள் சந்திக்கும் அறைகூவல்கள்”என்ற தலைப்பில் ஜான் கென்னடி, உலகமயத்தால் தமிழர்கள் இழக்கும் பொருளாதார உரிமைகள் என்ற தலைப்பில் கா. அய்யநாதன் ஆகியோர் உரையாற்றினர். வழக்கறிஞர் த. பானுமதி சிறப்புரையாற்றினார். மு. குமரேசன் நிகழ்ச்சியை நெறிப்படுத்தினார். பாராட்டரங்கம் மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு தலைவர் பேரா. த. செயராமன் உள்ளிட்ட கதிராமங்கலம் மற்றும் நெடுவாசல் போராளிகள், மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழர் விடியல் கட்சியைச் சேர்ந்த டைசன், இளமாறன் மற்றும் தோழர்கள் உள்ளிட்ட சிறை மீண்ட களப்போராளிகளுக்கு ஈகக் கேடயங்களை தலைவர் பழ. நெடுமாறன் அளித்துப் பாராட்டினார். ்இளம் தேசிய விஞ்ஞானிகள்” விருதுப் பெற்ற மயிலாடுதுறை கேம்பிரிட்ஜ் பள்ளி மாணவர்கள் ஜி. பாலாஜி, கார்த்தி கிஷோர், இனிய சுதர்சன் ஆகியோரைப் பாராட்டிக் கேடயங்களை வழங்கி தலைவர் பழ. நெடுமாறன் சிறப்பித்தார். பொதுக் கருத்தரங்கம் த.தே.மு.வின் மாநிலப் பொதுச்செயலாளர் அயனாபுரம் சி. முருகேசன் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கிற்கு மாநில நிர்வாகிகள் சி.சி. சாமி, கு.செ. வீரப்பன், உதயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில நிர்வாகிகளான எம்.ஆர். மாணிக்கம், ஆவல் கணேசன், நெடுமான், மாவட்டத் தலைவர்களான சா. இலாரன்சு, நே. புவனேசுவரன், பி. தெட்சிணாமூர்த்தி, சு.வ. தமிழ்மாறன், ஆ. இரா. பாலசுப்பிரமணியன், வே. கணேசன், அருணா சுந்தர்ராஜன், செந்தில் குமார், சி. சிலம்பரசன், இரா. இளமுருகன் ஆகியோர் உரையாற்றினர். சோ. இராசராசன் இந்நிகழ்ச்சியை நெறிப்படுத்தினார். இறுதியாக அனைவருக்கும் மு. சண்முகம் நன்றிதெரிவித்து உரையாற்றினார். இறுதியாக தலைவர் பழ. நெடுமாறன் சிறப்புரை யாற்றினார். மாநாட்டுத் தீர்மானங்கள் 1. காவிரிப் பாசனப் பகுதிகளைச் சீரழிக்கும் மீத்தேன், கெயில், ஷேல் போன்ற மக்களுக்கு எதிரான திட்டங்களை இந்திய அரசு உடனே கைவிட வேண்டுமென இம்மாநாடு வலியுறுத்துகிறது. 2.காவிரி நீர்ப்பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று தமிழ் நாட்டரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது. 3. காவிரிப்படுகையில் ஆறு, வாய்க்கால் போன்றவை வழியாக மட்டுமே நிலத்தடிக்கு நீர் இறங்கும் வயல்வெளிகளின் வழியாக மழைநீர் கனமான களிமண் தகடு பரவியிருப்பதால் கீழிறங்குவதில்லை. மேட்டூர் அணை திறக்கப்படும் காலத்தில் மட்டும் ஆறுகளில் ஓடும் நீர் மணற் பரப்பில் கீழிறங்கும். எனவே நிலத்தடி நீரைக்காரணம் காட்டித் தமிழ்நாட்டுக்குக் காவிரி நீரின் அளவு குறைத்துத் தரப்பட்டிருப்பதை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது. 4. மயிலாடுதுறைத் தலைநகரமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்குமாறு தமிழ்நாட்டரசை இம்மாநாடு வேண்டுகிறது. 5. மயிலாடுதுறையில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்காக நிலம் வாங்கி நான்கு ஆண்டுகளாகியும், இதுவரை அமைக்கப்படாத நிலைமையைச் கண்டிப்பதோடு, உடனடியாகப் பேருந்து நிலையம் அமைக்கும் பணிகளைத் தொடங்குமாறு இம்மாநாடு வேண்டிக் கொள்கிறது. 6. எவ்வித முன்னறிவிப்பும் இன்றி நூறு விழுக்காடு அதிகமாக உயர்த்தப்பட்ட வீட்டுவரி உயர்வை உடனடியாகக் கைவிடுமாறு மயிலாடுதுறை நகராட்சியை இம்மாநாடு வேண்டிக்கொள்கிறது. 7. நாகை மாவட்டத்தில் ஒகி புயலில் காணாமல் போன மீனவர்களின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று இம்மாநாடு வேண்டிக்கொள்கிறது. மாநாட்டின் வெற்றிக்குக் காரணமான செயல்வீரர்கள் மழையின் காரணமாக இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட போதிலும் விடாப்பிடியாக நின்று மயிலாடுதுறை மாநாட்டினை எப்படியும் நடத்தியே தீருவது என உறுதியுடன் செயல்பட்டு மிகச் சிறப்பாகவும், வெற்றிகரமாகவும் இம்மாநாட்டினை நடத்திக் காட்டிய மாநாட்டின் வரவேற்புக் குழுத் தலைவர் பேரா. இரா. முரளிதரன், துணைத் தலைவர் ப. சுகுமாரன், பொருளாளர், இரா. பூபதி, செயலாளர் சோ. இராசராசன், துணைச் செயலாளர்கள் க. இராசவேல், க. இராசேந்திரன் மற்றும் தங்க. இரமேசு, இரா. புஷ்பராஜ், மு. குமரேசன், கி. இரவிச்சந்திரன், ஆ. பால்ராஜ், மு. சுரேசு, சே. பூமிநாத், இரா. மாதவன், சாமி. சங்கர், மா. செங்கதிர், சு. சேகர், மணிகண்டன், மணிவேல், சிரஞ்சீவி, சண்முகம் ஆகியோரை அனைவரும் பாராட்டினர். தலைவர் பழ. நெடுமாறன் அனைவரின் கைகளைக் குலுக்கி தனது மகிழ்ச்சியையும், வாழ்த்தினையும், பாராட்டினையும் தெரிவித்தார். |