உலகத் தமிழர் பேரமைப்பின் சார்பில் "தமிழர் வரலாற்றுத் தொன்மை - கருத்தரங்கம்” 23-06-2018 காரி(க்)கிழமை அன்று காலை 10 மணிமுதல் மாலை 6 மணி வரை மன்னார்குடி சிறீகோவிந்த் மகாலில் சிறப்பாக நடைபெற்றது.
இம்மாநாட்டினை வெற்றிகரமாக நடத்தியதோடு, உலகத் தமிழர் பேரமைப்பு வைப்பு நிதிக்காக 1,65,000/- வெண் பொற்காசுகளை வரவேற்புக்குழுவின் தலைவர் மரு. இலரா பாரதிசெல்வன் அவர்களும், செயலாளர் ச. கலைச்செல்வன், உறுப்பினர்கள் ஆ. அரிகரன், ச. மகேந்திரன், இரா. இராசசேகரன், இரா. பாரதிதாசன், மு. கணேசன், கோ. சுதாகரன், க. இராசா, ம.பு. சரவணன், இரா. மணி, க. சதீசுகுமார் ஆகியோர் அளித்தனர். அவர்களுக்கு உலகத் தமிழர் பேரமைப்பின் சார்பில் உளம் கனிந்த நன்றியும், பாராட்டும் என்றும் உரியது. மன்னையில் பெய்த கருத்து மழை! 23-06-18 காரி(க்)கிழமை அன்று மன்னார்குடி சிறீகோவிந்த் மகாலில் உலகத் தமிழர் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற தமிழர் வரலாற்றத் தொன்மை கருத்தரங்கிற்கு செயலாளர் நாயகம் ந.மு. தமிழ்மணி தலைமை தாங்கினார். வரவேற்புக் குழு தலைவர் மரு. இலரா பாரதிசெல்வன் அனைவரையும் வரவேற்றார். காலையில் நடைபெற்ற கருத்தரங்கில் செயலாளர் ஜோ. ஜான்கென்னடி தொகுத்து வழங்கினார். கீழடி அகழாய்வு - வைகைக் கரை நாகரிகம் என்னும் தலைப்பில் கி. அமர்நாத் இராமகிருட்டிணன் உரையாற்றினார். வரலாற்றில் பூம்புகார் என்னும் தலைப்பில்
ந. அதியமான் ஆற்றவேண்டிய உரையினை பேரா. வீ. செல்வக்குமார் படித்தார். பிற்பகல் நடைபெற்ற கருத்தரங்கினை செயலாளர் துரை. குபேந்திரன் தொகுத்தளித்தார். அரிக்கமேடும் - அயலகத் தொடர்புகளும் என்னும் தலைப்பில் பேரா.வீ. செல்வக்குமார் அவர்களும், அகழாய்வுகளின் அடிப்படையில் தமிழர் நாகரிகத்தின் தோற்றமும் - வளர்ச்சியும் என்னும் தலைப்பில் முனைவர் தி. சுப்பிரமணியன் உரையாற்றினார். வரவேற்புக்குழுவின் செயலாளர் ச. கலைச்செல்வன் நன்றியுரையாற்றினார். கருத்தரங்கில் திரளான மக்களும், குறிப்பாக, மாணவர்களும் - மாணவிகளும் கலந்துகொண்டு சிறப்பித்தது பாராட்டத்தக்கதாகும். |