மன்னார் புதைகுழியில் 100 எலும்புக் கூடுகள் PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 17 செப்டம்பர் 2018 12:15

இலங்கையில் வடக்கு மாநிலத்தில் உள்ள மன்னார் மாவட்டத்தில் அண்மையில் ஒரு புதைகுழியில்  நூற்றுக்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.  இதில் எட்டு குழந்தைகளின் எலும்புக் கூடுகள் உள்ளன.


போர்க் காலத்தில் சிங்கள இராணுவத்தினால் பிடித்துச் செல்லப்பட்ட தமிழர்களின் எலும்புக் கூடுகளாக இவை  இருக்கக்கூடும் என உள்ளூர் மக்கள் கூறுகிறார்கள்.  
இவ்வாண்டு மே மாதம் அகழ்வாராய்ச்சி நிபுணரான ராஜ் சோமன்தேவா என்பவர்  இந்தப்  புதைகுழியைக் கண்டுபிடித்தார். கடந்த 2014ஆம் ஆண்டு  பிப்ரவரியில் திருக்கேதீஸ்வரம்  கோயில்  அருகே இதே போல ஒரு புதைகுழியில் 30 மனித  எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.  இது சம்பந்தமாக நீதிமன்ற  விசாரணைக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.