உலக மகளிர் நாள் - கருத்தரங்கம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 16 மார்ச் 2019 13:53

09-03-2019 தமிழ்நாடு முற்போக்கு பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் திருச்சியில் 'பெண்களுக்கு சம உரிமையும், சம வாய்ப்பும் அளிக்காத சமூகம் ஒரு காலும் முன்னேற முடியாது' என்னும் தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு தோழர் த. பானுமதி அவர்கள் தலைமை தாங்கினார்.

வழக்கறிஞர் கு. பாரதி அனைவரையும் வரவேற்றார். தோழர்கள் இ. அங்கயற்கண்ணி, பேரா. மணிமேகலை, முனைவர் இரா. செந்தாமரை, ஜே. சுபத்ரா, முனைவர் ஆ. ராசாத்தி,  பெ. தமயந்தி, அ. விஜயலெட்சுமி, செ. கனிமொழி ஆகியோர் உரையாற்றினர்.
இவ்விழாவில் மூத்தத் தலைவர் இரா. நல்லகண்ணு, பழ. நெடுமாறன், நந்தலாலா, மீ.தா. பாண்டியன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். விழாவில் தோழர்  இரா. நல்லகண்ணு அவர்களைப் பாராட்டும் வகையில் ஒரு இலட்சம் வெண் பொற்காசுகளை விழாக் குழுவினர் சார்பில் தோழர் த. பானுமதி அவர்கள் அளித்தார். தோழர்  செ. வளர்மதி அனைவருக்கும் நன்றி கூறினார்.  
புதுச்சேரி
08-03-19 அன்று புதுச்சேரி மாநில தமிழர் தேசிய முன்னணியின் சார்பில் உலக மகளிர் தின  விழா நடைபெற்றது. பாவலர் விசாலாட்சி மொழி வாழ்த்துப்  பாடல் பாடினார். செல்வி சி. பூவிழி நெறியாள்கை செய்தார். பாவலர் வி. இளவரசி தலைமை தாங்க, திருமதிகள் க. சானகி, தேவகி, த. வெற்றிச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மு. சிவசனனி வரவேற்புரையாற்றினார். முனைவர் ஏ. இராசலெட்சுமி நோக்க உரையாற்றினார்.  
'மாதவம் செய்திடல் வேண்டும்' என்ற தலைப்பில் நடைபெற்ற பாட்டரங்கிற்கு முனைவர் ஆ. விசயராணி தலைமை தாங்கினார். முனைவர்கள் இலட்சுமி தத்தை, கு. தேன்மொழி, இரா. தேவி, மரகதம், ஆசிரியர் ஆ. தேவி, பாவலர் ஆ. சு. சுமித்ரா  ஆகியோர் உரையாற்றினார். பின்னர்  நடைபெற்ற  கருத்தரங்கில் தோழர்  துளசி  பாக்கியவதி,  முனைவர் சே.  சியாமளா, முனைவர் ப. பட்டம்மாள் ஆகியோர்  சிறப்புரையாற்றினார். பாவலர் த. பூங்கொடி அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

 
காப்புரிமை © 2019 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.