தமிழறிஞர்கள் படத்திறப்பு விழா PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 16 அக்டோபர் 2019 14:24

28-09-2019 சனிக்கிழமை மாலை தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மறைந்த தமிழறிஞர்கள் க.ப. அறவாணன், சிலம்பொலி செல்லப்பன், கி.த. பச்சையப்பன், பிரபஞ்சன் ஆகியோரது படங்களை உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் திரு. பழ. நெடுமாறன் அவர்கள் திறந்து வைத்தார்.

க.ப. அறவாணனைப்பற்றி திரு. சிலம்பு நா. செல்வராசு, சிலம்பொலி செல்லப்பனாரைப் பற்றி திரு. நாமக்கல்   பீ.ஏ. சித்திக், கி.த. பச்சையப்பானரைப் பற்றி  புலவர் இரத்தின. வேலன், பிரபஞ்சனைப்   பற்றி திரு. ந.மு. தமிழ்மணி ஆகியோர் நினைவேந்தல் உரையாற்றினார்கள் நிறைவாக திரு.பழ. நெடுமாறன் அவர்கள் தமிழறிஞர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தி உரையாற்றினார். முன்னதாக ஐயனாபுரம் சி. முருகேசன் வரவேற்புரை நிகழ்த்தினார். பேரா.வி. பாரி நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார். இந் நிகழ்ச்சியில் முனைவர் தாயம்மாள் அறவாணன், கி.த.ப. திருமாறன் குடும்பத்தினர் மற்றும் க.ப.அறவாணன்  அவர்களின் மாணவர்களும், உலகத் தமிழர் பேரமைப்பு நிர்வாகிகள்    திரு.  சா. இராமன்,  திரு. து. குபேந்திரன், திரு. ஜோ. ஜான்கென்னடி மற்றும் தமிழ் உணர்வாளர்கள் பலரும் கலந்து  கொண்டனர்.

 
காப்புரிமை © 2020 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.