தலை நிமிர்ந்த தமிழ்த் தேசியம் 40ஆவது ஆண்டு விழா மாநாடு மதுரையில் திரண்ட மக்கள் வெள்ளம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 07 ஜனவரி 2020 14:37

22-12-2019 ஞாயிறு அன்று காலை 9 மணிக்கு மங்கல இசையுடன் தமிழர் தேசிய முன்னணியின் 40ஆவது ஆண்டு விழாச் சிறப்பு மாநாடு தொடங்கியது.  காலை 10 மணிக்கு புலவர் துரை. மதிவாணன் கொடியேற்றிய போது தமிழ் வாழ்க!  தமிழர் வெல்க!! தமிழ்த் தேசியம் ஓங்குக!!! என கூடியிருந்த தோழர்கள் முழங்கினர். மாநாட்டின் வரவேற்புக் குழுத் தலைவர்  வெ.ந. கணேசன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

மூத்த தோழர் கு.செ. வீரப்பன் தொடக்கவுரையாற்றினார்.
மாநாட்டிற்குத் தலைமை தாங்கும்படி மூத்த தோழர் சி.சி. சாமி அவர்களை இரா. பாலசுப்ரமணியம் முன்மொழிய மாவட்டத் தலைவர்கள் மயிலை இரா. இரவி, சு.வ. தமிழ்மாறன், சி. செந்தில்நாதன் ஆகியோர் வழிமொழிந்தனர். மூத்த தோழர் சி.சி. சாமி அவர்கள் தலைமையுரையாற்றினார். தலை நிமிர்ந்த தமிழ்த் தேசியம் தொகுப்பு மலரை தலைமை நிலையப் பொதுச் செயலாளர் செ.ப. முத்தமிழ்மணி வெளியிட்டு உரையாற்றினார். பா. இளங்கோவன், வீ.மு. தமிழ்வேந்தன், பா, சோதி நரசிம்மன், பெ. சுந்தரசேகரன், மா. செந்தில்குமார், இரா. முருகேசன், பி. தெட்சிணாமூர்த்தி, செந்தில்நாதன், இராசேசு கண்ணா ஆகியோர் மலர்களைப் பெற்றுக்கொண்டனர். இக்கருத்தரங்கில் தொகுப்புரையை சா. இலாரன்சு (வடசென்னை) வழங்கினர்.
காலை 11.30 மணிக்கு தொடங்கிய முதல் கருத்தரங்கிற்கு மாநில மகளிரணி அமைப்பாளர் செஞ்சி சாய்ரா தலைமை தாங்கினார். மாநில இளைஞரணி அமைப்பாளர் கா. தமிழ்வேங்கை தொடக்கவுரையாற்றினார். மாவட்ட மகளிரணி அமைப்பாளர்கள் இரா. கனகவல்லி (திருச்சி), விடுதலை சுதா (தஞ்சை), விசயபானு (திண்டுக்கல்), ம. காயத்திரி (மதுரை மாநகர்), வசந்தி (காஞ்சிபுரம்), ச. தனலட்சுமி (சிவகங்கை), சா. இந்திராணி (கடலூர்), இரா. இராசேசுவரி (நாகை), பிரித்தா தமிழச்சி (திருவள்ளூர்), து. தேவகி ஆனந்து (புதுவை), அருளம்மாள் (முகவை) ஆகியோரும், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்கள் லுக்குமான் அக்கிம் (தஞ்சை),  சி.எஸ். சரவணன் (மதுரை மாநகர்), க. இராசவேல் (நாகை), தெ. செல்வம் (தேனி), கு. பாபு (திண்டுக்கல்), அ.இர. இராசுகுமார் (நாமக்கல்),         கோ. பாலமுருகன் (திருச்சி), சு. வெங்கடேசப் பெருமாள் (புதுவை), அ. இரகு (சேலம்), வ. பாண்டியன் (கிருட்டிணகிரி), ஏ. வினோத்குமார் (கடலூர்),                            க. வடிவேல் (வடசென்னை), ப. வெற்றிச்செல்வன் (அரியலூர்) ஆகியோரும், மாவட்ட மாணவரணி அமைப்பாளர்கள் பா. பாரதிதாசன் (கடலூர்),  கா. சரவணன் (திருச்சி), ச.க. சண்முகம் (புதுக்கோட்டை),   வை. குறள்நெறியன் (தஞ்சை), அ. அரீசுவரர் (புதுவை), செ. பூபதி (சேலம்), இரா. மாதவன் (நாகை), ஆ.செல்வராசு (அரியலூர்) ஆகியோரும் அறிமுகப் படுத்தப்பட்டனர். திருவாரூர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இரா. இராசசேகரன் தொகுப்புரை வழங்கினார்.
பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய தமிழீழ விடுதலைப் போரில் தமிழர் தேசிய முன்னணியின் பங்கு என்ற தலைப்பில் நடைபெற்ற இரண்டாவது கருத்தரங்கிற்கு மூத்த தோழர் சி. முருகேசன் தலைமை  தாங்கினார். மூத்த தோழர்  தி.ம. பழனியாண்டி, புதுச்சேரி மாநிலத் தலைவர் துரை. மாலிறையன், அரியலூர் மாவட்டத் தலைவர் இரா.  அரங்கநாடன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநிலப் பொதுச்செயலாளர் பசுமலை "தமிழகக் களத்தில்" என்ற தலைப்பில் உரையாற்றினார். மாநிலத் துணைத் தலைவர் பா. இறையெழிலன் தமிழர் "தேசிய இயக்கம் தடைக்கு முன்" என்ற தலைப்பிலும், நெல்லை மாவட்டத் தலைவர் இளஞ்செழியன் "தமிழர் தேசிய இயக்கம் தடைக்குப் பின்" என்னும் தலைப்பிலும் உரையாற்றினர்.  அருணா சுந்தரராசன் (சிவகங்கை) தொகுப்புரை நிகழ்த்தினார்.
மாலை 4.30 மணிக்கு இயக்கத்தின் செயல்பாடுகள் என்ற தலைப்பில் மூன்றாவது கருத்தரங்கம் தொடங்கியது.  இதற்கு மாநிலத் துணைத் தலைவர் சா. இராமன் தலைமை தாங்கினார். கி.செ. பழமலை (கடலூர்), நாகேசுவரன் (இராமநாதபுரம்), மு. முருகையன், சதா. முத்துக்கிருட்டிணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலத் துணைத் தலைவர்  தா. பானுமதி "இயக்கத்தின் செயல்பாடுகள் - நீதிமன்றத்தில்" என்னும் தலைப்பிலும், ஜோ. ஜான்கென்னடி "இயக்கத்தின் செயல்பாடுகள் சட்டமன்றத்தில்" என்னும் தலைப்பிலும் உரையாற்றினர்.
நாற்பது ஆண்டு கால இயக்க வரலாற்றில் என்னும் பொதுத் தலைப்பின் கீழ் மாநிலப் பொதுச் செயலாளர் ந.மு. தமிழ்மணி "தமிழ்த் தேசிய எழுச்சியும் - தலைவர் நெடுமாறனின் பங்கும்" என்னும் தலைப்பிலும், மாநிலப் பொதுச் செயலாளர் மரு. பாரதிசெல்வன் "எதிர்கொண்ட அடக்கு முறைகள் - சிறைவாசங்கள்" என்னும் தலைப்பிலும், நாகை மாவட்டத் தலைவர் பேரா. இரா. முரளிதரன் - "உரிமை மீட்புப் பயணங்கள்"  என்னும் தலைப்பிலும் உரையாற்றினர். ச. கலைச்செல்வன் (திருவாரூர்) தொகுப்புரை வழங்கினார்.
மாலை 6 மணிக்கு தொடங்கிய நிறைவரங்கத்திற்கு மூத்த தோழர் எம்.ஆர். மாணிக்கம் தலைமை தாங்கினார். மூத்த தோழர்கள் இயக்குநர் வி. சேகர்,   புலவர் இரத்தினவேலன் (தஞ்சை), பேரா. ஆனந்தன், மாநிலப் பொருளாளர் ம. உதயகுமார் ஆகியோர்  முன்னிலை வகித்தனர். தலைவர் பழ. நெடுமாறன் நிறைவுரையாற்றினார். ஆவல் கணேசன் தொகுப்புரை வழங்கினார். 40ஆண்டு காலமாக தமிழ்த் தேசியத்தை முன்னெடுத்துச் செல்ல களம் புகுந்தும், சிறை புகுந்தும் எண்ணற்ற துன்பங்களை இன்முகத்துடன் ஏற்ற மூத்த தோழர்களுக்கு தமிழ்த் தேசியச் செம்மல் என்னும் விருதளித்து தலைவர் நெடுமாறன் பாராட்டினார். வரவேற்புக் குழுவின் செயலாளர் சி. வீராச்சாமி நன்றி கூறினார்.

 
காப்புரிமை © 2020 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.