தில்லி முதல்வர் வீட்டுச் சிறை வைப்பு தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் கடும் கண்டனம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 08 டிசம்பர் 2020 11:45

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை… தில்லியைச் சுற்றி விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்திற்கு நேரில் சென்று ஆதரவுத் தெரிவித்தார் என்பதற்காக, அம்மாநில முதலமைச்சர் கெஜ்ரிவால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார் என்ற செய்தி அனைவரையும் அதிர வைத்துள்ளது.

ஒரு மாநிலத்தின் முதலமைச்சரை வீட்டுக்குள்ளேயே சிறை வைப்பது என்பது அவரின் செயற்பாடுகளை மட்டுமல்ல, மாநில அரசின் செயற்பாடுகளையே முடக்குவதாகும். மத்திய அரசின் இந்த ஏதேச்சதிகாரப் போக்கை மிக வன்மையாகக் கண்டிக்கிறேன்.

இன்று தில்லி முதலமைச்சருக்கு ஏற்பட்டிருக்கிற நிலை, நாளை எதிர்க்கட்சிகள் ஆளும் பல்வேறு மாநில முதலமைச்சர்களுக்கும் ஏற்படும் என்பதை உணர்ந்து, அனைத்து மாநில முதலமைச்சர்களும் இதற்கு எதிராகக் குரலெழுப்ப வேண்டும். மக்களாட்சி முறையில் நம்பிக்கைக் கொண்ட அனைவருமே இதற்கு எதிராகப் போராட முன்வரவேண்டும் என வலியுறுத்துகிறேன்.

 
காப்புரிமை © 2021 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.