மூத்த தமிழறிஞர் இளங்குமரனார் மறைவு! உலகத் தமிழர் பேரமைப்பின் சார்பில் பழ. நெடுமாறன் இரங்கல்! |
|
|
|
சனிக்கிழமை, 31 ஜூலை 2021 14:29 |
உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை: நம் மத்தியில் மிக மூத்த தமிழறிஞராக வலம் வந்து தமிழின் சிறப்புகளை தனது எழுத்தாலும், பேச்சாலும் அனைவருக்கும் ஊட்டிப் பெருமிதம் கொள்ள வைத்த மாபெரும் தமிழறிஞர் இரா. இளம்குமரனார் அவர்கள் காலமான செய்தி அறிந்து ஆழ்ந்த துயரடைந்தேன்.
முன்னாள் தலைமையமைச்சர் நேரு, குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் ஆகியோரால் பாராட்டப் பெற்றவர். தமிழக அரசின் திரு.வி.க. விருது உட்படப் பல விருதுகளைப் பெற்றவர். 2002ஆம் ஆண்டில் உலகத் தமிழர் பேரமைப்பின் தொடக்க விழா மாநாட்டில் அவருக்கு “உலகப் பெருந்தமிழர் விருதி”னை வழங்கி மகிழ்ந்தோம்.
“அடக்கம் அமரருள் உய்க்கும்” என்றார் வள்ளுவப் பெருந்தகை. அதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்த பெருமைக்குரியவர் இளங்குமரனார் அவர்களாவார். தன் வாழ்க்கை வரலாற்றிற்கு “ஒரு புள்ளின் கதை” என்று தலைப்பிட்டு எழுதியமையே அவரின் தன்னடக்கத்திற்குச் சான்றாகும்.
அவரின் மறைவின் மூலம் தமிழ்கூறும் நல்லுலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. உலகமெங்கும் வாழ்கிற தமிழர்கள் சார்பில் அவருக்கு வீர வணக்கம் செலுத்துகிறேன். |