இளங்குமரனார் - இறையெழிலனார் நினைவேந்தல் கூட்டம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 15 நவம்பர் 2021 11:50

உலகத் தமிழ்க் கழகத்தின் சார்பில் 07-11-21 ஞாயிறு காலை 10 மணியளவில் தமிழ் மூதறிஞர் இரா. இளங்குமரனார், உலக முதன்மொழி வெளியீட்டாளர் பா.இறையெழிலனார் ஆகியோரின் உருவப் படங்களின் திறப்பும், நினைவேந்தல் நிகழ்ச்சிக் கூட்டமும் சென்னை செய்தியாளர் சங்க அரங்கில் நடைபெற்றது.

 

இக்கூட்டத்திற்கு திரு. செல்சின். நாகவரசன் தலைமை தாங்கினார். திரு.கி. வெற்றிச்செல்வன் வரவேற்புரை நிகழ்த்தினார். இரு அறிஞர்களின் படங்களை உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் திறந்து வைத்தார். திரு. உதயை. வீரையன், புலவர் இரெத்தினவேலன்,  திரு. தா. அன்புவாணன் வெற்றிச்செல்வி, முனைவர் கலை. செழியன், புதுவை திரு. வேலா, ஆகியோர் நினைவேந்தல் உரை நிகழ்த்தினர்.  திரு. மு. அரசெழிலன் அனைவருக்கும் நன்றி கூறினார்.

 
காப்புரிமை © 2023 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.