28-11-21 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மதுரை ஆதீனம், இளங்குமரனார், முனைவர் இராம. சுந்தரம், எழுத்தாளர்கள் கி.இராசநாராயணன், பெ.சு. மணி, இறையெழிலன், பாவலர் புலமைப்பித்தன் ஆகியோரின் படங்களைத் திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு முள்ளிவாய்க்கால் இலக்கிய முற்றத்தின் தலைவர் பேரா. வி. பாரி தலைமை தாங்கினார். ந.மு. தமிழ்மணி, சி. முருகேசன், து. குபேந்திரன், சா. இராமன், மரு. இரா. பாரதிசெல்வன், பொன். வைத்தியநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சு. பழநிராசன் அனைவரையும் வரவேற்றார். புலியூர் முருகேசன் தொகுப்புரை வழங்கினார்.
மதுரை ஆதீனக் கர்த்தரின் படத்தை பழ. நெடுமாறன், முதுமுனைவர் இரா. இளங்குமரனாரின் படத்தை பி. வரதராசன், முனைவர் இராம. சுந்தரம் படத்தை பேரா. கி. அரங்கன், கி. இராசநாராயணன் படத்தை முனைவர் பா. இரவிக்குமார், பெ.சு.மணி படத்தை காஞ்சி அமுதன், பா. இறையெழிலன் படத்தை உதயை வீரையன், பாவலர் புலமைப்பித்தன் படத்தை முனைவர் கலியபெருமாள் ஆகியோர் திறந்து வைத்து நினைவேந்தல் உரையாற்றினர். மறைந்த அறிஞர்களின் குடும்பத்தினர் மேடைக்கு அழைக்கப்பட்டு அவர்களும் மற்றும் உலகத் தமிழர் பேரமைப்பு நிர்வாகிகளும் மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினர். கலந்துகொண்ட அனைவருக்கும் பழ. பிரகதீசு நன்றி தெரிவித்தார். தமிழர் தேசிய முன்னணியின் தஞ்சை மாவட்டத் தலைவர் பொன். வைத்தியநாதன் அனைவருக்கும் சுவையான சிற்றுண்டி அளித்து விருந்தோம்பினார். |