நீரியல் அறிஞர் பழ. கோமதிநாயகம் அவர்களுக்குப் பாராட்டு! PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 03 ஜனவரி 2022 10:25

gomathiதமிழக அரசின் பொதுப் பணித்துறையில் தலைமைப் பொறியாளராகப் பணியாற்றிய முனைவர்   பழ. கோமதிநாயகம் அவர்கள் தனது பணிக்காலத்தில் பெரும் பகுதியை தமிழக ஆற்றுப் படுகைகள் மற்றும் ஏரிகளின் வரலாறு, அவற்றின் பாசன முறைகள் ஆகியவற்றை எழுத்திலும், காட்சிப்படுத்துவதிலும் செலவிட்டார்.

இவரது காலடித் தடங்கள் படியாத ஆற்றுப் படுகைகள், ஏரிகள் மற்றும் குளங்கள் தமிழ்நாட்டில் மிகமிகக் குறைவாகும்.

இந்து ஆங்கில நாளிதழ் சார்பில் இவரை நேர்காணல் கண்ட திருமதி. கே. இலட்சுமி அவர்களிடம் கூறியதாவது: “தமிழ்நாட்டில் உள்ள பழமைமிக்க பாரம்பரியமான கட்டடங்களுக்கு எவ்வளவு முதன்மை அளிக்கிறோமோ அதைப்போல பழங்கால ஏரிகளுக்கும் அளிக்கவேண்டும்” என்று கூறினார்.

“தமிழ் எழுத்தாளரான திருமதி. இராசம் கிருட்டிணன் அணைக் கட்டப்படுவதை மையமாகக் கொண்டு எழுதிய நெடுங்கதை ஒன்றை நான் படித்த இளமைப் பருவத்திலேயே பாசன வசதிகளை கண்டறிவதில் எனக்கு ஆர்வம் மிகுந்தது. அரசுப் பணியின் போது நேரடியாக ஆற்றுப்படுகைகளையும், ஏரிகளையும் பார்வையிடவும், அவற்றின் பாசன வசதிகளைக் குறித்து ஆராயவும் வாய்ப்புக் கிடைத்தது” என்று கூறினார்.

அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட திருச்சியில் அமைந்திருந்த தமிழ்நாடு பாசன மேலாண்மை பயிற்சி நிலையத்தில் பேராசிரியராகப் பணியாற்றினார். அவருடைய பணி மேலும் விரிவடைந்தது. தமிழ்நாட்டில் உள்ள 33 ஆற்றுப்படுகைகளை ஆராய்ந்து இவர் காட்சிப்படுத்திய பதிவுகள் இன்னமும் திருச்சி நிலையத்தில் பாதுகாப்பாக உள்ளன.

(21-01-2007 - இந்து ஆங்கில நாளிதழில் பழ. கோமதிநாயகம் அவர்களின் படத்துடன் வெளிவந்த செய்தியின் தமிழாக்கம்)

 

 
காப்புரிமை © 2022 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.