தமிழர் தேசிய முன்னணி - மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 02 மே 2022 10:09

மதுரை

15.04.2022 வெள்ளிக்கிழமை மாலை 3 மணிக்கு மதுரை தமிழர் தேசிய முன்னணி அலுவலகத்தில் மதுரை மாநகர், மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களின் நிர்வாகிகள் மற்றும் தேசியப் பேரவைக்குழு உறுப்பினர்கள், மாவட்ட மகளிர், இளைஞர், மாணவரணி அமைப்பாளர்கள் ஆகியோரின் கூட்டம் நடைபெற்றது

மூத்த தலைவர்கள் சி.சி. சாமி, ஜி.எஸ். வீரப்பன், மாநிலப் பொதுச் செயலாளர் பசுமலை, மதுரை மாவட்டத் தலைவர் பாலசுப்பிரமணியம், சிவகங்கை மாவட்டத் தலைவர் அருணா சுந்தரராசன் உட்பட பலரும் பங்கேற்றனர். இன்றைய அரசியல் சூழ்நிலைகள் குறித்தும், கட்சியின் எதிர்கால வேலைத் திட்டங்கள் குறித்தும் பலரும் கருத்துரை வழங்கினர்.

இறுதியாக தலைவர் பழ. நெடுமாறன் உரையாற்றினார். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மதுரை மாநகரத் தலைவர் எஸ். கணேசன் சிறப்பாகச் செய்திருந்தார். அனைவருக்கும் பசுமலை நன்றி தெரிவித்தார்.

திருச்சி

23.04.2022 சனிக்கிழமை அன்று மாலை 3 மணியளவில் திருச்சி அருண் ஹோட்டலில் திருச்சி, புதுக்கோட்டை, கரூர், அரியலூர் மாவட்டங்களின் நிர்வாகிகள் மற்றும் தேசியப் பேரவைக்குழு உறுப்பினர்கள், மாவட்ட மகளிர், இளைஞர், மாணவரணி அமைப்பாளர்கள் ஆகியோரின் கூட்டம் நடைபெற்றது.

மாநிலத் துணைத் தலைவர் பானுமதி, மாநிலப் பொதுச்செயலாளர்கள் முத்தமிழ்மணி, ந.மு. தமிழ்மணி, மூத்த தலைவர்கள் சி. முருகேசன், பழநியாண்டி, அமுதன், திருச்சி மாவட்டத் தலைவர் ஆத்மநாதன், கரூர் மாவட்டத் தலைவர் செந்தில்நாதன், அரியலூர் மாவட்டத் தலைவர் அரங்கநாடன் உட்பட பலர் பங்கேற்றனர். இன்றைய அரசியல் சூழ்நிலைகள் குறித்தும், கட்சியின் எதிர்கால வேலைத் திட்டங்கள் குறித்தும் பலரும் கருத்துரை வழங்கினர்.

இறுதியாக தலைவர் பழ. நெடுமாறன் உரையாற்றினார். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மாநிலத் துணைத்தலைவர் பானுமதி, திருச்சி மாவட்டத் தலைவர் ஆத்மநாதன் ஆகியோர் சிறப்பாகச் செய்திருந்தனர். அனைவருக்கும் வீரமணி நன்றி தெரிவித்தார்.

தஞ்சை

24.04.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 4 மணியளவில் தஞ்சை சைமன் திருமண மண்டபத்தில் தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களின் நிர்வாகிகள் மற்றும் தேசியப் பேரவைக்குழு உறுப்பினர்கள், மாவட்ட மகளிர், இளைஞர், மாணவரணி அமைப்பாளர்கள் ஆகியோரின் கூட்டம் நடைபெற்றது.

மாநிலப் பொதுச்செயலாளர்கள் முத்தமிழ்மணி, ந.மு. தமிழ்மணி, மரு. பாரதிசெல்வன், மூத்த தலைவர் சி. முருகேசன், திருவாரூர் மாவட்டத் தலைவர் கலைச்செல்வன், மயிலாடுதுறை மாவட்டத் தலைவர் பேரா. முரளிதரன் உட்பட பலர் பங்கேற்றனர். இன்றைய அரசியல் சூழ்நிலைகள் குறித்தும், கட்சியின் எதிர்கால வேலைத் திட்டங்கள் குறித்தும் பலரும் கருத்துரை வழங்கினர்.

இறுதியாக தலைவர் பழ. நெடுமாறன் உரையாற்றினார். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை தஞ்சை மாவட்டத் தலைவர் வைத்தியநாதன் சிறப்பாகச் செய்திருந்தனர். அனைவருக்கும் கலைச்செல்வன் நன்றி தெரிவித்தார்.

புதுச்சேரி

29.04.2022 வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் புதுவைத் தமிழ்ச் சங்கம் மண்டபத்தில் புதுச்சேரி மாநிலம், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களின் நிர்வாகிகள் மற்றும் தேசியப் பேரவைக்குழு உறுப்பினர்கள், மாவட்ட மகளிர், இளைஞர், மாணவரணி அமைப்பாளர்கள் ஆகியோரின் கூட்டம் நடைபெற்றது.

மாநிலப் பொதுச்செயலாளர்கள் முத்தமிழ்மணி, ந.மு. தமிழ்மணி, புதுச்சேரி மாநிலத் தலைவர் துரை. மாலிறையன், கடலூர் மாவட்டச் செயலாளர் பாலசுப்பிரமணியன், விழுப்புரம் மாவட்டத் தலைவர் சோதி நரசிம்மன், மாநில மகளிரணி அமைப்பாளர் செஞ்சி சாய்ரா, மாநில இளைஞரணி அமைப்பாளர் தமிழ்வேங்கை, மாணவரணி அமைப்பார் செயப்பிரகாசு உட்பட பலர் பங்கேற்றனர். இன்றைய அரசியல் சூழ்நிலைகள் குறித்தும், கட்சியின் எதிர்கால வேலைத் திட்டங்கள் குறித்தும் பலரும் கருத்துரை வழங்கினர்.

இறுதியாக தலைவர் பழ. நெடுமாறன் உரையாற்றினார். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை புதுச்சேரி மாநிலத் தலைவர் துரை. மாலிறையன் மற்றும் நிர்வாகிகள் சிறப்பாகச் செய்திருந்தனர். அனைவருக்கும் புதுவை மாநிலச் செயலாளர் இரா. இளமுருகன் நன்றி தெரிவித்தார்

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------

‘தனி’

நெடுங்கதை அறிமுக விழா

23.04.2022 சனிக்கிழமை மாலை 5 மணிக்கு திருச்சி அருண் ஹோட்டலில் க. ஆத்மநாதன் எழுதிய ‘தனி’ நெடுங்கதை அறிமுக விழாவிற்குவழக்கறிஞர் பெ. கனகவேல் தலைமை தாங்கினார். மூத்த தலைவர் சி. முருகேசன் முன்னிலை வகித்தார். வழக்கறிஞர் த. பானுமதி நூல் அறிமுக உரையாற்றினார். பொறியாளர் ச. முத்துக்குமாரசாமி நூல் திறனாய்வு உரை நிகழ்த்தினார்.

பி. இரெ. அரசெழிலன், சு. லெனின், க. சுரேஷ்குமார், க. பொன்னுதுரை, நா. கண்மணி, பா. தமிழ்மலர் ஆகியோர் நூலைப் பெற்றுக்கொண்டனர். பழ. நெடுமாறன் வாழ்த்துரை வழங்கினார். க. ஆத்மநாதன் ஏற்புரை நிகழ்த்தினார். வழக்கறிஞர் பா. தீபிகா நன்றி கூறினார்.

---------------------------------------------------------------------------------------------------------

பாசறைப் பாணர் தேனிசைச் செல்லப்பா

81ஆவது பிறந்தநாள் விழா

21-04-2022 வியாழக்கிழமை அன்று 6 மணிக்கு சென்னை பல்லவபுரம் விதுர் மண்டபத்தில் பாசறைப் பாணர் தேனிசைச் செல்லப்பா அவர்களின் 81ஆவது பிறந்தநாள் விழா சிறப்பாக நடைபெற்றது.

கடந்த 50ஆண்டு காலத்திற்கும் மேலாக தன்னுடைய இசைத் திறமையை தமிழ், தமிழர் எழுச்சிக்காக ஒப்படைத்துக்கொண்டு மக்களை மகிழ்ச்சிப் பெருக்கிலும், உணர்ச்சி வெள்ளத்திலும் ஆற்றிய பெருமைக்குரிய தேனிசைச் செல்லப்பாவிற்கு உலகத் தமிழர் பேரமைப்பின் சார்பில் ‘பாசறைப் பாணர்’ என்ற விருது வழங்கப்பட்டது.

உலகம் முழுவதிலும் தமிழர் வாழும் நாடுகளுக்குச் சென்று தன்னுடைய இன்னிசையால் அனைவருக்கும் உணர்ச்சியும் எழுச்சியும் ஊட்டிய பெருமை அவருக்குரியது. பாவேந்தர் பாரதிதாசனின் பாடல்கள், உணர்ச்சிக் கவிஞர் காசிஆனந்தனின் தமிழீழ விடுதலை கீதங்கள் ஆகியவற்றை மட்டுமே மேடைதோறும் பாடிய ஒரேயொரு தமிழ் இசைவாணர் இவர் மட்டுமே. இவரின் பாடல்கள் அடங்கிய ஒலிப்பேழைகளும், குறுந்தகடுகளும் உலகத் தமிழர்களின் இல்லங்களில் இன்றும் எதிரொலிக்கின்றன.

81ஆவது அகவையை எட்டியுள்ள பாசறைப் பாணர் தேனிசைச் செல்லப்பா மற்றும் அவரது துணைவியார் ஆகியோருக்கு உலகத் தமிழர்களின் சார்பில் பல்லாண்டு! பல்லாண்டு!! கூறுவதில் நாம் பெருமிதம் கொள்கிறோம்.

இவ்விழாவினையொட்டி உலகத் தமிழர் பேரமைப்புக்கு அவரின் மகன் இளங்கோ செல்லப்பா மற்றும் குடும்பத்தினர் ரூ. 5,000/-நன்கொடை வழங்கினர்.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------

பேரா. அறிவரசன் - படத்திறப்பு விழா

தமிழ் வளர்த்த குடும்பத் தோன்றலான பேராசிரியர் மு. செ. அறிவரசன் அவர்களின் படத்திறப்பு விழா இலக்கிய விழாவாக இராயகிரி தமிழ்ச்சங்கத்தின் சார்பில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

17.04.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10 மணிக்கு இராயகிரி பேரூராட்சி சமுதாய நலக் கூடத்தில் நடைபெற்ற இவ்விழாவிற்கு ச. குருசாமி தலைமை தாங்கினார். சி.க. அறிவழகன் அனைவரையும் வரவேற்றார். புலவர் ச. கோமதிநாயகம் விழாவை நெறிப்படுத்தினார். மாரியப்பன், க. சீனிவாசன், பசு. வேலாயுதம், ந. இசக்கித்துரை, ஆ. நெடுஞ்சேரலாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வழக்கறிஞர் பொ. இளஞ்செழியன் புகழுரையாற்றினார். பேரா. அறிவரசன் படத்தைத் திறந்து வைத்து பழ. நெடுமாறன் சிறப்புரையாற்றினார்.

விழா முடிவடைந்ததும் கடையம் சென்று பேரா. அறிவரசனின் துணைவியார் ஞானத்தாய் மற்றும் குடும்பத்தினரை பழ. நெடுமாறன், அவரின் துணைவியார் பார்வதி ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறினர்.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------

தமிழ்ப் பண்பாட்டுக் கலைவிழா

25.04.2022 திங்கட்கிழமை கங்கைகொண்ட சோழபுரம் மீரா மகாலில் “தமிழ் மக்கள் பண்பாட்டுக் கலைவிழா” நடைபெற்றது. தமிழர் நீதிக் கட்சியின் சார்பில் நடத்தப்பட்ட இவ்விழாவிற்கு சுபா. இளவரசன் தலைமை தாங்கினார். புலவர் இரா. மணிவண்ணன் அனைவரையும் வரவேற்றார். விழாவினை பழ. நெடுமாறன் தொடக்கி வைத்தார். சட்டமன்ற உறுப்பினர் பொன். குமார், பேரா. த. செயராமன், அ. பெருநற்கிள்ளி, கோபாலகிருட்டிணன் உட்பட பலர் உரையாற்றினர்.

சிறப்பாகத் தொண்டாற்றிய பலருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

__________________________________________________________________________________________

பாவேந்தர் பிறந்தநாள் விழா – கருத்தரங்கம்

தமிழர் தேசிய முன்னணியின் புதுச்சேரி மாநிலக் கிளையின் சார்பில் 29.04.2022 வெள்ளிக்கிழமை அன்று மாலை 6 மணிக்கு புதுவைத் தமிழ்ச் சங்க அரங்கில் பாவேந்தர் பிறந்தநாள் விழா கருத்தரங்கம் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு துரை. மாலிறையன் தலைமை தாங்கினார். இரா. இளமுருகன் அனைவரையும் வரவேற்றார். வை.இரா. பாலசுப்பிரமணியன், பா. சோதிநரசிம்மன், செ. செயப்பிரகாசு, கா. தமிழ்வேங்கை, செஞ்சி சாய்ரா, முனைவர் அ. உசேன், ப. திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பொதுச்செயலாளர்கள் செ.ப. முத்தமிழ்மணி, ந.மு. தமிழ்மணி மற்றும் சு. வேல்முருகன் ஆகியோர் உரையாற்றினர். பழ. நெடுமாறன் சிறப்புரையாற்றினார். முனைவர் ஆ. ஆனந்தன் தொகுப்புரையையும், ந. செங்கதிர் நன்றியுரையையும் ஆற்றினர்.

 
காப்புரிமை © 2023 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.