முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை- நினைவேந்தல் கருத்தரங்கம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 18 மே 2022 10:56

14.05.2022 சனிக்கிழமை மாலை சென்னை பிட்டி தியாகராயர் அரங்கத்தில் தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பின் சார்பில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் கருத்தரங்கம் நடைபெற்றது.

 

ChennaiMayNinaivendhal 2022

கவிஞர் காசி ஆனந்தன் தலைமை வகித்தார். மாணவர் தலைவர் பாரிமைந்தன் நோக்கவுரையாற்றினார். மணிப்பூர் மாநில மேனாள் முதல்வர் இராதா பினோடு கொய்ஜம், ஜம்மு பல்கலைக்கழக பேரா. ஆதித்யகுமார்-ஜா, மணிப்பூர் மனித உரிமைகள் அமைப்பின் இயக்குநர் பப்லு லோயி டோங்பாம் ஆகியோரும், தமிழ்நாட்டைச் சேர்ந்த பழ. நெடுமாறன், அண்ணாமலை (பா.ச.க.), திருச்சி வேலுச்சாமி (காங்கிரசு), பாலு (பா.ம.க.), நல்லதுரை (அ.ம.மு.க.), எம்.ஏ. கோன் (சமதாக் கட்சி), ஆவல்கணேசன் (த.தே.மு.), புலவர் இரத்தினவேல் (த.கூ.) உட்படப் பலர் பங்கேற்றனர். நத்தம் சேக் பரித் நன்றியுரை கூறினார். திரளான மாணவர்களும், பொதுமக்களும் பெரும் கூட்டமாக கலந்துகொண்டனர்.

 

 
காப்புரிமை © 2023 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.