03.07.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மன்னார்குடி, காந்தி சாலையில் உள்ள சிறீ கோவிந்த மகால் (மாடி) சிறு அரங்கில் தமிழர் தேசிய முன்னணியின் சார்பில் செயல் வீரர்களின் பயிற்சி முகாம் நடைபெறவிருக்கிறது.
தஞ்சை மற்றும் திருச்சி மண்டலங்களைச் சேர்ந்த மாவட்டங்களின் நிர்வாகிகளுக்கான செயல் வீரர் பயிற்சி முகாம் காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறவிருக்கும் இப்பயிற்சி முகாமில் பல்வேறு தலைப்புகளில் அறிஞர்கள் உரையாற்றுகிறார்கள். இறுதியாக தலைவர் பழ. நெடுமாறன் செயல் வீரர்களுடனான கலந்துரையாடலில் பங்கேற்கிறார். இப்பயிற்சி முகாமில் பங்கேற்கும் செயல் வீரர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்படும். இப்பயிற்சி முகாமில் பல்வேறு தலைப்புகளில் மாநில நிர்வாகிகள் உரையாற்றுகின்றனர். முகாமின் நிகழ்ச்சிநிரல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
காலை 9.30 மணி: கொடி ஏற்றுதல் - மூத்த தலைவர் தி.ம. பழனியாண்டி
9.40 மணி: வரவேற்புரை: திரு. இரா. இராசசேகரன்
தலைமை: திரு. ச. கலைச்செல்வம்
9.50 மணி: தொடக்கவுரை - மூத்த தலைவர் அயனாபுரம் சி. முருகேசன்
தலைப்பும் – உரையாற்றுபவரும்
காலை 10 மணி:
“வந்தேறிகளின் சுரண்டலும் தமிழகமும்”- மரு. இலரா. பாரதிசெல்வன்
காலை 11 மணி:
“கல்வி மொழி எது? தமிழா? ஆங்கிலமா? இந்தி யா?” - திரு. ந.மு. தமிழ்மணி
காலை 12 மணி:
“சாதி - சமய வேறுபாடுகளுக்கு எதிரான தமிழ்த்தேசியம்” -பொறிஞர் ஜோ. ஜான்கென்னடி
பகல் 1 மணி முதல் 2 மணி வரை - உணவு இடைவேளை
பிற்பகல் 2 மணி:
“இந்து பாசிசத்துக்கு மாற்றுத் திட்டம் எது?” - வழக்கறிஞர் த. பானுமதி
பிற்பகல் 3 மணி:
“தமிழ்த் தேசிய கட்டுமானமும் கட்சிப் பணியும்”- திரு. செ.ப. முத்தமிழ்மணி
பிற்பகல் 4 மணி:
“தமிழீழப் போராட்டமும் நமது கடமையும்” - வழக்கறிஞர் பசுமலை
மாலை 5 மணி:
செயல் வீரர்களுடன் கலந்துரையாடல் - தலைவர் பழ. நெடுமாறன்
மாலை 6 மணி: நன்றியுரை: ஆ. அரிகரன் |