தமிழர் தேசிய முன்னணி - செயல்வீரர் பயிற்சி முகாம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 02 ஆகஸ்ட் 2022 11:48

தமிழர் தேசிய முன்னணியின் திருவாரூர் மாவட்ட அமைப்பின் சார்பில் செயல்வீரர் பயிற்சி முகாம் 03.07.22 ஞாயிற்றுக்கிழமை அன்று மன்னார்குடியில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

function-1தஞ்சை மாவட்டத் தலைவர் பொன். வைத்தியநாதன், நாகை, மயிலாடுதுறை மாவட்டத் தலைவர் பேரா. முரளி, திருச்சி மாவட்டத் தலைவர் ஆத்மநாதன், கரூர் மாவட்டத் தலைவர் செந்தில்நாதன், புதுக்கோட்டை மாநிலச் செயற்குழு உறுப்பினர் அமுதன், மதுரை மாநகர மாவட்டத் தலைவர் வெ.ந. கணேசன், மாநில மகளிரணி அமைப்பாளர் செஞ்சி சாய்ரா, திருவாரூர், பெரம்பலூர் உட்பட மாவட்டங்களின் நிர்வாகிகள், மகளிர், இளைஞர், மாணவரணிகளின் அமைப்பாளர்கள் உட்பட ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர். மதுரை, இராமநாதபுரம், சிவகங்கை போன்ற மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் சிலரும் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டனர்.

மன்னார்குடி சிறீ கோவிந்த மகாலில் நடைபெற்ற இக்கருத்தரங்கிற்கு திருவாரூர் மாவட்டத் தலைவர் ச. கலைச்செல்வம் தலைமை தாங்கினார். மூத்த தலைவர் தி.ம. பழனியாண்டி கொடியேற்றினார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இரா. இராசசேகரன் வரவேற்புரையாற்றினார். மூத்த தலைவர் அயனாபுரம் சி. முருகேசன் கருத்தரங்கை தொடக்கி வைத்து உரையாற்றினார்.

முகாம் தொடக்கத்தில் தமிழர் தேசிய முன்னணியின் துணைத் தலைவர் சா. இராமன் - பழ. நெடுமாறன் எழுதிய “பாசிசம் – தீர்வு தன்னாட்சியே” என்னும் நூலை வெளியிட்டு உரையாற்றினார்.

காலை 10 மணிக்கு தமிழர் தேசிய முன்னணியின் மாநிலப் பொதுச் செயலாளரும் முகாம் பொறுப்பாளருமான மரு. இலரா. பாரதிசெல்வன் “வந்தேறிகளின் சுரண்டலும் தமிழகமும்” என்னும் தலைப்பில் உரையாற்றினார்.

காலை 11 மணிக்கு தமிழர் தேசிய முன்னணியின் மாநிலப் பொதுச் செயலாளர் ந.மு. தமிழ்மணி “கல்வி மொழி எது? தமிழா? ஆங்கிலமா? இந்தி யா?” என்னும் தலைப்பில் உரையாற்றினார்.

function-2 copyநண்பகல் 12 மணிக்கு “சாதி – சமய வேறுபாடுகளுக்கு எதிரான தமிழ்த்தேசியம்” என்ற தலைப்பில் பொறிஞர் ஜோ. ஜான்கென்னடி உரையாற்றினார்.

பிற்பகல் 1 மணி முதல் 3 மணி வரை உணவு இடைவேளைக்காக முகாம் ஒத்தி வைக்கப்பட்டது. அனைவருக்கும் அறுசுவை விருந்து அளிக்கப்பட்டது.

பிற்பகல் 3 மணிக்கு மாநிலத் துணை தலைவரும், வழக்கறிஞருமான த. பானுமதி அம்மையார் “இந்து பாசிசத்திற்கு மாற்றுத் திட்டம் எது? என்னும் தலைப்பில் உரையாற்றினார்.

பிற்பகல் 4 மணிக்கு தமிழர் தேசிய முன்னணியின் மாநிலப் பொதுச் செயலாளரும், வழக்கறிஞருமான பசுமலை “தமிழீழப் போராட்டமும் நமது கடமையும்” என்னும் தலைப்பில் உரையாற்றினார்.

மாலை 5 மணிக்கு தமிழர் தேசிய முன்னணியின் மாநிலத் தலைவர் பழ. நெடுமாறன் உரையாற்றினார்.

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.