திருமண விழாக்கள் PDF அச்சிடுக மின்னஞ்சல்
ஞாயிற்றுக்கிழமை, 16 அக்டோபர் 2022 11:27

08.09.2022 அன்று தஞ்சை மணமகள் இல்லமான வட்ட முற்றத்தில் பா. செல்வபாண்டியன் – சு. கலாவதி இணையரின் மகள் செல்வி: ஆதிரை – திருச்சி பா. மதிவாணன் – திலகவதி இணையரின் மகன் செல்வன்: அரசு ஆகியோரின் திருமண விழா பேரா. ஆ.இரா. வேங்கடாசலபதி தலைமையிலும், பழ. நெடுமாறன் முன்னிலையிலும் நடைபெற்றது.

ஆதிரை - அரசு

marriage function-216.10

08.10.2022 சனிக்கிழமை மாலை 6.30 மணியளவில் தஞ்சை சிறீ வாரி சேச மகாலில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியிலும், 16.10.2022 ஞாயிறு அன்று சென்னையில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியிலும் திரளான உறவினர்களும், நண்பர்களும் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.

காவியா இலரா - பூபாலன்

marriage finction-22

மன்னார்குடி மரு. இரா. பாரதிசெல்வன் – பா. அகிலா இணையரின் மகள் செல்வி: காவியா இலரா, தலைவாசல் க. இராமசாமி – பாக்கியம் இணையரின் மகன் செல்வன்: பூபாலன் ஆகியோரின் திருமண விழா மன்னார்குடி மலர் மகாலில் 07.10.2022 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்றது. செந்தமிழ் ஆகம அந்தணர் இறைநெறி இமயவன் தமிழ் முறைப்படி இத்திருமணத்தைச் சிறப்புற நிகழ்த்தினார். மணவிழாவிற்குப் பல்வேறு தலைவர்களும், தோழர்களும், உறவினர்களும், நண்பர்களும் திரளாகக் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

 

 
காப்புரிமை © 2023 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.