ஐயனார் கோயிலை அகற்றி புத்தர் சிலை வைப்பு! ஈழத்தில் சிங்களவர்களின் அடாத செயல் PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 05 நவம்பர் 2022 16:04

இலங்கையில் தமிழர் பகுதியில் முல்லைத் தீவு மாவட்டம், குருந்தூர் மலை கிராமத்தில் ஆதி சிவன் ஐயனார் கோயில் ஒன்று இருந்தது.

தொன்று தொட்டு கிராம மக்கள் அங்கு வழிபட்டு வந்தனர். ஆனால், இக்கிராமத்திற்குத் திடீரென ஒரு சரக்குந்துவில் புத்தர் சிலை, கட்டடம் கட்டுவதற்குரிய பொருட்கள் ஆகியவற்றுடன் பௌத்தத் துறவிகளும், பல சிங்களர்களும் அங்கு வந்து இறங்கினர்.

அந்த இடம் தொல்லியல் தடம் என்றும், அங்குப் பௌத்த விகாரை ஒன்று இருந்ததாகவும் அதற்குச் சிங்கள அரசர்கள் மானியங்கள் அளித்து உதவியதாகவும் கூறி அந்த இடத்தில் விகாரை ஒன்றைக் கட்டி எழுப்பி அங்கு புத்தர் சிலையை வைக்கும் வேலைகளில் ஈடுபட்டனர். அக்கிராம வாழ் மக்கள் அதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனாலும்கூட, அங்குத் தூபி ஒன்றை அமைத்து அருகில் புத்தர் சிலை மற்றும் சில கட்டமைப்புகளைக் கட்டி முடித்துவிட்டனர்.

இது குறித்து முல்லைத் தீவு நீதிமன்றத்தில் குருந்தூர் கிராம மக்கள் முறையிட்டனர். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி “தொல்லியல் பிரதேசம் என அறிவிக்கப்பட்டுள்ள பகுதியில் விகாரை அமைக்கப்பட்டது தவறு என்றும், அதை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் ஆணையிட்டார். ஆனாலும் அந்த ஆணையை இதுவரை நிறைவேற்றுவதற்குச் சிங்கள அரசு அதிகாரிகள் முன்வரவில்லை.

 

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.