வியாழக்கிழமை, 01 டிசம்பர் 2022 10:19 |
27.11.2022 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் 10ஆவது ஆண்டு தொடக்க நிகழ்ச்சியும், தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் உயிரீகம் செய்த மாவீரர்களுக்கும் மக்களுக்கும் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சியும் நடைபெற்றன.
இந்நிகழ்ச்சிகளுக்கு உலகத் தமிழர் பேரமைப்பின் பொதுச்செயலாளர் ஜோ. ஜான்கென்னடி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் அயனாபுரம் சி. முருகேசன் வரவேற்புரை நிகழ்த்தினார். துணைத் தலைவர் த. மணிவண்ணன், செயலாளர் து. குபேந்திரன் ஆகியோர் மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தி பேசினர்.
இந்திய ஒன்றிய அரசின் முன்னாள் இணை அமைச்சர் செஞ்சி ந. இராமச்சந்திரன் அவர்கள் மாவீரர் நாள் உரையாற்றினார். உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் சிறப்புரையாற்றினார். பேரா. பாரி அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
முற்றத்தின் முன் அனைவரும் கூடி சுடரேற்றும் நிகழ்ச்சி அடுத்து நடைபெற்றது. மாவீரர்களின் குடும்பங்களைச் சேர்ந்த சாரதா தேவி, ஜெயந்தி ஆகியோர் சுடரேற்றினர். தொடர்ந்து கூடியிருந்தோர் அனைவரும் சுடரேற்றி வீரவணக்கம் செலுத்தினர்.
1985ஆம் ஆண்டில் விடுதலைப்புலிகளின் துணையுடன் பழ. நெடுமாறன் தமிழீழத்தில் மேற்கொண்ட சுற்றுப்பயணம் குறித்த ஆவணப் படமாக சுதந்திர தாகம் திரையிடப்பட்டது, |