முற்றத்தில் தமிழறிஞர்கள் படத்திறப்பு PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 02 ஜனவரி 2023 12:11

21.12.2022 புதன்கிழமை மாலை 5 மணிக்கு முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் முனைவர் அவ்வை நடராசன், முனைவர் க. நெடுஞ்செழியன், எழுத்தாளர் பா. செயப்பிரகாசம் ஆகியோரின் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு உலகத் தமிழர் பேரமைப்பின் செயலாளர் நாயகம் ந.மு. தமிழ்மணி தலைமை தாங்கினார். சி. முருகேசன், து. குபேந்திரன், மரு. பாரதிசெல்வன், பொறிஞர் ஜோ. ஜான்கென்னடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரா. வி. பாரி அனைவரையும் வரவேற்றார்.

padathirappur nigalchchi

முனைவர் அவ்வை து. நடராசன் படத்தை முனைவர் இரா. குணசேகரன், முனைவர் க. நெடுஞ்செழியன் படத்தை சி. அறிவுறுவோன், ம. பொன்னிறைவன், எழுத்தாளர் பா. செயப்பிரகாசம் படத்தை கே.எஸ். இராதாகிருஷ்ணன் ஆகியோர் திறந்து வைத்து நினைவேந்தல் உரையாற்றினர். உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் நிறைவுரையாற்றினார். மறைந்த அறிஞர்களின் குடும்பத்தினர் மேடைக்கு அழைக்கப்பட்டு அவர்களும் மற்றும் உலகத் தமிழர் பேரமைப்பின் நிர்வாகிகளும் மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினர். அனைவருக்கும் பா. செல்வபாண்டியன் நன்றி தெரிவித்தார்.

 
காப்புரிமை © 2023 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.