முள்ளிவாய்க்கால் முற்றத்தில் பொங்கல் விழா PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 15 பெப்ரவரி 2023 12:06

05.02.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் பொங்கல் விழா நடைபெற்றது.

அன்று காலை 10 மணிமுதல் 12 மணிவரை சிறுவர் – சிறுமிகளுக்கான மாறுவேடப் போட்டி மற்றும் ஓவியப் போட்டி ஆகியவற்றை திரு. துரை. குபேந்திரன் தொடக்கி வைத்தார்.

lakshmiபிற்பகல் 3 மணிக்கு திரு. சோ.கு. வேதையன் அவர்களின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் பொங்கல் விழாவினை திரு. சி. முருகேசன் தொடக்கி வைத்தார். பேரா. வி. பாரி தொகுப்புரை நிகழ்த்தினார். திரு. த. மணிவண்ணன் தலைமை தாங்க திருவாளர்கள் சு. பழனிராசன், பொன். வைத்தியநாதன், சதா. முத்துக்கிருட்டிணன், இராம. சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

போட்டிகளில் வெற்றி பெற்ற சிறுவர் – சிறுமிகளுக்கு பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி முதல்வர் முனைவர் செ. காயத்ரி அவர்கள் பரிசுகளை வழங்கி உரையாற்றினார். பாவலர் ந. முத்துநிலவன் அவர்கள் பொங்கல் விழாக் குறித்து சிறப்புரையாற்றினார்.

திரு. ஜோ. ஜான்கென்னடி, பழ. நெடுமாறன் ஆகியோர் நிறைவுரையாற்றினர். புலவர் கரு. அரங்கராசன் அனைவருக்கும் நன்றி கூறினார்.

விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் பொங்கல் விருந்து அளிக்கப்பெற்றது.

 
காப்புரிமை © 2023 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.