வள்ளலார் உபகாரச் சாலை – திறப்பு விழா PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 15 பெப்ரவரி 2023 12:08

05.02.23 ஞாயிற்றுக்கிழமை அன்று விழுப்புரத்தில் திருஅருட்பா ஆ. பாலகிருட்டிணப்பிள்ளை நினைவு அறக்கட்டளையின் சார்பில் கட்டப்பட்டுள்ள வள்ளலார் உபகாரச் சாலை திறப்பு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.

காலை 6.30 மணிக்கு அகவல் உணர்ந்து ஓதுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. காலை 8 மணிக்கு சன்மார்க்க கொடி கட்டும் நிகழ்ச்சியினைத் திரு. க.பாலசுப்பிரமணியன் அவர்கள் நிகழ்த்தினார். காலை 8.15 மணிக்கு சிற்றுண்டி வழங்கும் நிகழ்ச்சியை பா. நம்மாழ்வார் தொடக்கிவைத்தார். காலை 9 மணிக்கு அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலரான திரு. கா. தமிழ்வேங்கை அனைவரையும் வரவேற்றார்.

vallalaar function-2

உபகாரச் சாலையை உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் திறந்து வைத்தார்.

பகல் 1 மணிக்கு உணவு உபசரிப்பு நிகழ்ச்சியினை விழுப்புரம் நகர்மன்ற முன்னாள் தலைவர் திரு. இரா. ஜனகராசு தொடக்கி வைத்தார். அனைவருக்கும் திருமதி. த. மங்கையர்க்கரசி நன்றி தெரிவித்தார்.

 
காப்புரிமை © 2023 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.