உலக மகளிர் நாள் கருத்தரங்கம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 15 மார்ச் 2023 13:53

தமிழ்நாடு முற்போக்கு பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் உலக மகளிர் நாள் கருத்தரங்கம் 04-03-2023 அன்று மதுரை நீதிநாயகம் வி.ஆர். கிருஷ்ணய்யர் சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது.

srihari

“அரசியல் மயமாகும் நீதிமன்றங்களும் - ஆபத்துக்குள்ளாகும் நீதி பரிபாலன முறையும்” என்னும் தலைப்பில் நடைபெற்ற இக்கருத்தரங்குக்கு வழக்கறிஞர் த. பானுமதி தலைமைதாங்கினார். தோழர் பா. தீபிகா அனைவரையும் வரவேற்றார். தோழர் பெ. கனகவேல் தொடக்கவுரை நிகழ்த்தினார். தோழர்கள் இ. அங்கயற்கண்ணி, பெ. தமயந்தி, வெ.ந. கணேசன் ஆகியோர் உரையாற்றினர். பல்வேறு தீர்மானங்கள் இக்கருத்தரங்கில் நிறைவேற்றப்பட்டன.

கருத்தரங்கு நிறைவுரையை மேனாள் நீதிநாயகம் து. அரிபரந்தாமன் நிகழ்த்தினார். பழ. நெடுமாறன் சிறப்புரையாற்றினார். தோழர் ஆ. லியோ பொட்டுமணி அனைவருக்கும் நன்றி கூறினார்.

 
காப்புரிமை © 2023 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.