பழனிக்குமணனுக்குப் பாராட்டு விழா PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 08 செப்டம்பர் 2023 16:36

கோவை பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்று அமெரிக்காவில் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் இதழில் பணியாற்றி வரும் நெ. பழனிக்குமணன் அவர்களுக்கு புகழ்பூத்த முன்னாள் மாணவர் விருதினை அக்கல்லூரி வழங்கியுள்ளது.

DSC04339

25.08.2023 அன்று அக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவிற்கு இந்திய அரசின் பாதுகாப்புத்துறைச் செயலாளர் முனைவர் வி. சமீர்காமத் அவர்கள் தலைமை தாங்கினார். கல்லூரியின் நிர்வாகக் குழுத் தலைவர், முதல்வர், பேராசிரியர்கள் பாராட்டுரை வழங்கினர். விழாவில் மாணவர்களும், முன்னாள் மாணவர்களும், விருது பெற்றவரின் குடும்பத்தினரும் கலந்துகொண்டனர்.

கணினி துறையில் அரிய சாதனைகள் புரிந்ததோடு, பத்திரிகைத் துறையில் புரிந்த சாதனைக்காக உலகளவிலான புலிட்சர் விருதினைப் பெற்று தான் படித்த கல்லூரிக்குப் பெருமைத் தேடித் தந்தமைக்காக நெ. பழனிக்குமணன் அவர்களை அழைத்து விழா நடத்தி முன்னாள் மாணவருக்கான சிறப்பு விருதினை வழங்கி அக்கல்லூரிப் பாராட்டியுள்ளது.

 
காப்புரிமை © 2023 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.