2023ஆம் ஆண்டு செப்டம்பர் 23 சனி, 24 ஞாயிறு ஆகிய இரு நாட்களிலும் தஞ்சை பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் உலகத் தமிழர் பேரமைப்பின் 10ஆம் ஆண்டு மாநாடு “தமிழர் தொன்மை வரலாற்றுச் சிறப்பு மாநாடாக” நடைபெற்றது.
இரு நாட்கள் நடைபெற்ற இம்மாநாட்டில் தமிழறிஞர்களும், தொல்லாய்வு அறிஞர்களும் பங்கேற்றுத் தமிழர்களின் தொன்மை வரலாற்றுச் சிறப்பினை எடுத்துரைத்து பேருரையாற்றினார்கள்.
காலை 9 மணிக்கு கோட்டைத்தெரு செந்தில்குமார் குழுவினரின் மங்கல இசையுடன் மாநாடு தொடங்கியது.
காலை 9.45 மணிக்கு உலகத் தமிழர் பேரமைப்பின் கொடியினை அயனாபுரம் சி. முருகேசன் ஏற்றி வைத்தார். சுற்றிலும் குழுமியிருந்தோர் முழக்கங்கள் எழுப்பினர்.
காலை 10 மணிக்கு உலகத் தமிழர் பேரமைப்பின் துணைத் தலைவரான பேரா. திரு. த. செயராமன் அவர்கள், சிந்துவெளி நாகரிகம், தமிழ்நாட்டில் தொல்லாய்வு நடைபெற்ற இடங்கள் ஆகியவற்றில் கண்டறியப்பட்ட தொல் தமிழர் நாகரிகத் தடயங்களின் படங்கள், அவற்றைப் பற்றிய குறிப்புகள், பழம் நாணயங்கள் மற்றும் மறைந்துபோன நெல் வகைகள் பற்றிய தமிழர் தொல் வரலாற்றுக் கண்காட்சியினைத் திறந்து வைத்து உரையாற்றினார்.
காலை 10.25 மணிக்கு மாநாட்டின் தொடக்கத்தில் உலகத் தமிழர் பண் இசைக்கப்பட்ட போது அனைவரும் எழுந்து நின்று வணக்கம் செலுத்தினர்.
காலை 10.30 மணியளவில்கீழடி, அரிக்கமேடு, பூம்புகார் ஆகிய தமிழகத்தின் தொல்லாய்வுத் தடயங்களிலிருந்து திரு. க. ஆத்மநாதன், பேரா. வை. இரா. பாலசுப்ரமணியன், திரு. தங்க. இரமேசு அவர்களுடன் திரளான தோழர்களும் பங்கேற்று தீச்சுடர் ஏந்தி மாநாட்டிற்கு வருகை தந்தனர்.
காலை 10.45 மணிக்கு உ.த.பே. பொதுச் செயலாளர் திரு. ந.மு. தமிழ்மணி வரவேற்புரை ஆற்றினார். முதுமுனைவர் ஆ. சிவசுப்ரமணியம் முதல்நாள் மாநாட்டின் தொடக்கவுரையாற்றினார். மாநாட்டிற்கு முனைவர் வீ. அரசு தலைமை தாங்கி உரையாற்றினார்.
12.15 மணிக்கு திரு. சா. இராமன், மாநாட்டு மலரினை வெளியிட்டு உரையாற்றினார். மாநாட்டு மலரை திருவாளர்கள் டி.சி.எஸ். தெட்சிணாமூர்த்தி, த. மணிவண்ணன் மற்றும் பலர் பெற்றுக் கொண்டனர்.
நண்பகல் 12.30 மணியளவில் வில்லியனூர் வேங்கடேசன் அவர்கள் எழுதிய “புதுச்சேரி மாநிலக் கல்வெட்டுகளின் சொல்லடைவு” நூலினை தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் திரு. செ.ப. முத்தமிழ்மணி வெளியிட்டு உரையாற்றினார். நூலினை திருவாளர்கள் மு. முருகையன், இரா. கோவிந்தராசு, துரை. மதிவாணன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
தொல்லாய்வு அறிஞர்களின் குறிப்புகள் அடங்கிய “தொல்லாய்வுத் தடயங்கள் நிறுவும் தமிழரின் தொன்மை” நூலினை உலகத் தமிழர் பேரமைப்பின் செயலாளர் திரு. பி. வரதராசன் வெளியிட்டு உரையாற்றினார். நூலினை மதுரையைச் சேர்ந்த 15 அமைப்பினர் பெற்றுக்கொண்டனர்.
மதியம் 1 மணி முதல் 2 மணி வரை மாநாட்டில் கலந்துகொண்ட அனைவருக்கும் அறுசுவை விருந்து அளிக்கப்பட்டது.
மதியம் 2 மணி முதல் 3 மணி வரை ஒரத்தநாடு கோபு குழுவினரின் தமிழிசை விருந்து நடைபெற்றது.
பிற்பகல் 3 மணிமுதல் 5.45 மணி வரை புலவர் கரு. அரங்கராசன் அவர்கள் முதல் நாள் கருத்தரங்கிற்கு நெறியாளராக இருந்து தொகுத்து வழங்கினார். முனைவர் இரா. காமராசு அவர்கள் தலைமை தாங்கினார். முனைவர் பெ. இரவிச்சந்திரன் “தமிழர் கடல் கடந்த வாணிபமும் – அரிக்க மேடும்”, முனைவர் வீ. செல்வகுமார் “சங்க கால முசிறிப் பட்டினமும் – அயலகத் தொடர்புகளும்”, முனைவர் கோ. விசயவேணுகோபால் “அகழ்வாராய்ச்சிகளில் தமிழ் எழுத்துகள்” தலைப்பில் பேருரையாற்றினார்கள்.
உலகப் பெருந்தமிழர் விருது: முனைவர் வீ. அரசு – முனைவர் கோ. விசயவேணுகோபால் – முனைவர் ஆ. பத்மாவதி
(பிற் சிறப்பு விருது) முனைவர் க. நெடுஞ்செழியன் -புலவர் செ. இராசு
முனைவர் கோ. பாலசுப்ரமணியன் – முனைவர் சு. இராசவேலு – முனைவர் நா. மார்க்சிய காந்தி
முனைவர் தியாக சத்தியமூர்த்தி - முனைவர் க.த. காந்திராசன் – முனைவர் அமர்நாத் இராமகிருட்டிணா Â
மிக சீரிய வகையில் தமிழுக்கு அயராது தொண்டாற்றி வரும் அறிஞர்கள் முனைவர் வீ. அரசு, முனைவர் கோ. விசயவேணுகோபால், முனைவர் ஆ. பத்மாவதி, முனைவர் க. நெடுஞ்செழியன் (பிற்சிறப்பு விருது), புலவர் செ. இராசு (பிற் சிறப்பு விருது) ஆகியோருக்கு “உலகப் பெருந்தமிழர் விருது” வழங்கப்பெற்றது.
இரவு 8.30 மணிக்கு உலகத் தமிழர் பேரமைப்பின் செயலாளர் திரு. துரை. குபேந்திரன் அவர்கள் நன்றியுரையாற்றினார்.
24.09.2023 – ஞாயிற்றுக்கிழமை
காலை 9 மணிக்கு இரெட்டிப்பாளையம் கே. இராஜேஷ் குழுவினரின் பறை இசையுடன் 2ஆம் நாள் மாநாடு தொடங்கியது.
காலை 10.45 மணிக்கு வழக்கறிஞர் த. பானுமதி அவர்கள் தொடக்கவுரையாற்றினார்.
கருத்தரங்கின் முதல் அமர்வுக்கு திரு. எம்.ஜி.கே. நிஜாமுதீன் அவர்கள் நெறியாளராக இருந்து தொகுத்து வழங்கினார்.
நண்பகல் 11.30 முதல் 1.00 மணி வரை கருத்தரங்கில் முனைவர் சு. இராசவேலு “கொடுமணலும் – தமிழக அயலவர் தொடர்புகளும்” என்ற தலைப்பிலும், முனைவர். க.த. காந்திராசன் “தொல் தமிழர் ஓவிய மரபு” என்ற தலைப்பிலும் பேருரையாற்றினார்கள்.
மதியம் 1 மணி முதல் 2 மணி வரை மாநாட்டில் கலந்துகொண்ட அனைவருக்கும் அறுசுவை விருந்து அளிக்கப்பட்டது.
மதியம் 2 மணி முதல் 3 மணி வரை தஞ்சை T.K.S. சிவகுருநாதன் குழுவினரின் இசை விருந்து நடைபெற்றது.
பிற்பகல் 3 மணிமுதல் 5.15 மணி வரை வழக்கறிஞர் தமித்தலட்சுமி தீனதயாளன் அவர்கள் 2ஆம் முதல் நாள் கருத்தரங்கிற்கு நெறியாளராக இருந்து தொகுத்து வழங்கினார். திரு. கணியன் பாலன் “பழம்பெரும் தமிழ்ச் சமூகம்”, முனைவர் தியாக சத்தியமூர்த்தி “ஆதிச்சநல்லூர் – பொருநை நாகரிகம்”, முனைவர் நா. மார்க்சிய காந்தி “சிந்துவெளி நாகரிகம்”, முனைவர் அமர்நாத் இராமகிருட்டிணா “தமிழர் நாகரிகம்” என்ற தலைப்பில் பேருரையாற்றினார்கள்.
மிக சீரிய வகையில் தமிழுக்கு அயராது தொண்டாற்றி வரும் அறிஞர்கள் முனைவர் கோ. பாலசுப்ரமணியன், முனைவர் க.த. காந்திராசன், முனவைர் நா. மார்க்சிய காந்தி, முனவைர் தியாக சத்தியமூர்த்தி, முனைவர் அமர்நாத் இராமகிருட்டிணா ஆகியோருக்கு “உலகப் பெருந்தமிழர் விருது” வழங்கப்பெற்றது.
இரவு 8 மணிக்கு பேரா. இரா. முரளிதரன் மாநாட்டுத் தீர்மானங்களை முன்மொழிய கூடியிருந்தோர் வழிமொழிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இரவு 8.15 மணியளவில் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் திரு. பழ. நெடுமாறன் அவர்கள் காணொலி மூலம் நிறைவுரை ஆற்றினார்.
இரவு 8.45 மணிக்கு திரு. சதா முத்துக்கிருட்டிணன் அனைவருக்கும் நன்றி கூறினார்.
உலகத் தமிழர் பண் பாடலுடன் மாநாடு இனிதே நிறைவுற்றது. |