நடிகர் விஜயகாந்த் மறைவு! PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 03 ஜனவரி 2024 13:43

தே.மு.தி.க. தலைவரும், சிறந்த நடிகருமான விஜயகாந்த் அவர்கள் காலமான செய்தியை அறிந்து மிக வருந்துகிறேன்.

reduce vijayமதுரை மாநகராட்சி உறுப்பினராக இருந்த அவருடைய தந்தையுடன் நெருங்கிப் பழகியிருக்கிறேன். சிறுவயது முதலே திரைப்பட நடிகராகவேண்டும் என்பதைத் தனது குறிக்கோளாகக் கொண்டிருந்த விஜயகாந்த் அவர்கள், தன்னுடைய திறமையினாலும், அயராத உழைப்பினாலும் அதில் வெற்றி பெற்று, நடிகர் சங்கத் தலைவராகவும் உயர்ந்தார். திரையுலகில் அவர் திரட்டிய செல்வத்தை மக்களுக்கு உதவும் அறத் தொண்டுகளில் செலவிட்டார். திரையுலகிலும், தமிழக மக்களிடமும் செல்வாக்குப் பெற்றவராகத் திகழ்ந்தார். தே.மு.தி.க.வைத் தொடங்கி எதிர்க்கட்சித் தலைவராகச் சட்டமன்றத்தில் பணியாற்றினார். அவருடைய மறைவு திரையுலகிற்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டிற்கே பேரிழப்பாகும். அவரது பிரிவினால் வருந்தும் அவரது குடும்பத்தினருக்கும், அவருடைய கட்சித் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.