தமிழீழத் தந்தை செல்வநாயகம் அவர்களின் 125ஆவது பிறந்தநாள் விழா, வள்ளலார் 201ஆவது ஆண்டுவிழா பழ. நெடுமாறன் எழுதி “தமிழர் போற்றிய வள்ளலார் இருவர்” நூல் வெளியீட்டு விழா ஆகிய முப்பெரும் விழா 11.02.24 ஞாயிறு மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. திரளானவர்கள் பங்கேற்றனர்.
தந்தை செல்வநாயகம் விழா
உலகத் தமிழர் பேரமைப்பின் பொதுச் செயலாளர் ந.மு. தமிழ்மணி வரவேற்புரை நிகழ்த்தினார். துரை. குபேந்திரன் முன்னிலை வகித்தார். உணர்ச்சிப் பாவலர் காசிஆனந்தன் விழாவிற்குத் தலைமை தாங்கி உரையாற்றினார். திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளருமான வி.சி. குகநாதன் அவர்கள் விழா உரை ஆற்றினார்.
நூல் வெளியீட்டு விழா
மாலை 5மணிக்கு பழ. நெடுமாறன் எழுதிய “தமிழர் போற்றிய வள்ளலார் இருவர்” நூல் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.
குறள்நெறிச் செம்மல் புலவர் சுப. இராமச்சந்திரன் நூலை வெளியிட்டுச் சிறப்புரையாற்றினார்.
சு. பழனிராசன், கோ. பாபு மற்றும் திரளானவர்கள் நூலைப் பெற்றுக் கொண்டனர்.
வள்ளலார் 201ஆவது ஆண்டு விழா
வள்ளலார் அவர்களின் 201ஆவது ஆண்டு விழாவிற்கு வடலூர் தலைமை சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர் படப்பை இரா. பாலகிருட்டிணன் தலைமை தாங்கினார். அயனாபுரம் சி. முருகேசன், சா. இராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திருவாடனை அரசுக் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் மு. பழனியப்பன் “காய் கொண்டு வந்திடுமோ பழம்கொண்டு வந்திடுமோ” என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். இறுதியாக உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் நிறைவுரையாற்றினார்.
முள்ளிவாய்க்கால் இலக்கிய முற்றத்தின் தலைவர் பேரா. வி. பாரி அனைவருக்கும் நன்றி கூறினார்.
அதன்பின் நடைபெற்ற தமிழர் விருந்தில் அனைவரும் பங்கேற்று உண்டு மகிழ்ந்தனர். |