பிரபாகரன் நூல் : குவியும் கடிதங்கள் PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 16 ஜூன் 2012 16:51
விடியலுக்குப் போராடி விதைகள் ஊன்றி
வீட்டோரும் நாட்டோரும் போற்ற வாழும்
இடிமுழக்க மாவீரன் இனக்காப் பாளன்,
இனமானக் களங்கண்ட புலித் தலைவன்
அடிமைகள் அனைவருமே போரா டித்தான்
ஆற்றலுள்ள குடியரசை அமைத்துள் ளார்கள்
படிநிலையில் படையமைத்துப் பண்பு காத்த
பைந்தமிழன் எல்லாளன் வாழ்க! வெல்க!

நூலொன்றை ஞாலத்தார் கற்றறியப்
பாடுபட்டுப் பாலொன்றைப் படைத்துள்ளீர் பாங்காக -
வேலொன்றை விட்டெறியும் வீரனுக்கு
வெற்றிப் பனுவலொன்றைக்
கட்டமைத்துத் தந்ததற்கு வாழ்த்து.

ஆ. நெடுஞ்சேரலாதன்
சோழபுரம் தெற்கு, விருதுநகர்

தலைவரின் அட்டைப் படம் ஒன்று போதும். மீண்டும் எம் களம் எழுச்சி பெற்று தாயக விடுதலையை அடைந்தே தீரும்.

உ. கணேசன், குடியேற்றம்

அழகான வடிவில், ஆழமான பொருளில் அழுத்தமான ஈழ வரலாறும் புரட்சியும் எழுதப்பட்டுள்ளதைப் படித்து, வீர உணர்ச்சி கொண்டேன். இதற்காக தங்களுக்கு என் மற்றும் என் குடும்ப நன்றிகள்.

- என். ஏழுமலை,
சின்னகாஞ்சிபுரம்

இது அய்யா பழ. நெடுமாறன் அவர்களின் மாபெரும் உழைப்பினால் கிடைத்த மிகப்பெரிய வரலாற்று நூல் ஆகும். அய்யா அவர்களின் படைப்பில் இந்த நூல் ஒரு மைல்கல் ஆகும். தமிழ்ச் சமுதாயத்திற்குக் கிடைத்துள்ள அரிய காலப் பெட்டகம். தமிழர்கள் அனைவ ருக்கும் கிடைத்தற்கரிய வரலாற்று நூல். இதனை உருவாக்கிய அய்யா அவர்களுக்கு எனது பணிந்த வணக்கம்.

- க.சு. ஆறுமுகம், அவிநாசி

படிக்கப் படிக்க இரத்தம் கொதிக்கிறது. கை, கால்கள் எல்லாம் ஆட்டம் காண்கின்றன.

இளமையில் அறியாமையில் திராவிடத்தில் வீழ்ந்து முதுமையில் இயலாத நிலையில் வாழ்ந்து கொண்டி ருக்கும் எனக்கு இந்நூல் புதிய இரத் தத்தைப் பாய்ச்சுவதுபோல் உணர்கிறேன்.

நன்றி, வணக்கம்.

சீ. மலர்வேந்தன், குறும்பூர்,

இந்தப் பணிக்காகப் பாராட்ட வார்த்தைகள் இல்லை. தமிழர் உள்ள காலம் வரை அய்யா உங்கள் பெயரும் புகழும் வாழும்.

இரா.வேல்சாமி, புதுச்சேரி.

உலகத் தமிழர்கள் உயர்வு பெற, தமிழின அடிமை விலங்கு அறுக்கப்பட அயராது அல்லும் பகலும் பாடுபடும் மாவீரன் தங்கள் தொண்டினை இந்த மண்ணகம் இருக்கும்வரை தமிழர் இனம் மட்டுமல்ல மனிதநேய மானுடர்கள் யாவருமே வாழ்த்துவோம். எதிர்காலம் உலகத் தமிழர்களுக்கு ஓர் ஒளிமயமாகத் திகழும் என்பதை நிலைப்படுத்த அடையாளமாக உள்ள இந்நூல் தமிழனாகப் பிறந்த ஒவ்வொருவர் கரத்திலும் அதன் கருத்துக்கள் மனத்திலும் மறையாமல் இடம் பெறல் வேண்டும்.

பார் போற்றும் படைப்பாற்றல் கொண்ட தாங்கள் சீர்போற்ற எதிர்காலத் தமிழ் இளைய சமுதாயம் எழுச்சி பெறும் என்பதற்கு இந்நூல் ஓர் ஆதாரமாக உள்ளது என்பதை எவரும் மறுக்க மாட்டார்கள்.

காலம் கனியும் என்பதுதான் உலகத் தமிழர்களின் ஒருமித்த குரலாகும்.

வாழ்க வையகம் போற்ற!

நன்றியுடன் தமிழ்த் தொண்டில்

பாவேந்தர் நண்பர் குழு
தாதகாப்பட்டி, சேலம்-636 006.

உலக வரலாற்றில் உன்னதமான படைப்பு

த. பழநியாண்டி, திருக்காம்புலியூர்

நூலின் முகப்பு முதலே, நூலிலுள்ள வரலாற்றுச் செய்திகளைப் படிக்கப் படிக்க, அடுத்த பக்கத்தில் என்ன செய்தி உள்ளது என்று அறிய வேண்டுமென்ற ஆவலைத் தூண்டுகிறது.

உலகத் தமிழர்கள் ஒவ்வொருவர் குடியிருப்பிலும் கட்டாயமாக இருக்க வேண்டியது இந்நூல். எட்டுக்கோடித் தமிழர்களுக்கும், இன்னும் எதிர்காலத்தில் பெருகவிருக்கும் ஒவ்வொரு தமிழ னுக்கும் இந்நூல்தான், திருக்குறளுக்கு அடுத்தபடியாகப் போற்றப்படவேண்டிய மறைநூல் என்றால் மிகையாகாது. அய்யா அவர்களின், "நான்காம் ஈழப்போர்' குறித்த வரலாற்று நூலையும் விரைவில் எதிர்பார்க்கிறோம்

ந. சுப்பிரமணியன்,
திருச்சி-620 017.

தங்களின் அரிய உழைப்புக்கு மேலும் ஒரு உயர் சான்றுபோல இந்நூல் அமைந்துள்ளது. அன்புடன் பாராட்டுகிறேன்.

க. தமிழ்மல்லன்

ஒவ்வொரு நூற்றாண்டுக்குமான புரட்சியாளர்கள் தோன்றுவதும், தேசிய இனங்கள் விடுதலை பெறுவதும் புரட்சியின் ஒரு பகுதியாக உள்ளது. மறு பகுதியில் அப்புரட்சியை ஒடுக்குப வர்கள், நசுக்குபவர்கள், புரட்சியைக் காட்டிக் கொடுக்கும் ரெண்டகத்தனமான வேலைகளில் ஈடுபடும் தொண்டை மான்கள், எட்டப்பர்கள், மு. கருணாநிதி போன்றவர்கள் சமகாலங்களில் தோன்றி எதிர்ப்புரட்சி செய்கின்றார்கள்.

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.