ஈழத்தமிழர்களைப் பாதுகாக்க ஐ.நா. படையை அனுப்ப வேண்டும் - பழ. நெடுமாறன் வேண்டுகோள் |
|
|
|
ஞாயிற்றுக்கிழமை, 01 ஜூலை 2012 17:31 |
ஈழத் தமிழர்கள் தொடர்ந்து தங்கள் உரிமைகளை வற்புறுத்துவார்களானால் நூற்றுக்கணக்கான முள்ளிவாய்க்கால்களைச் சந்திக்க நேரிடும் என சிங்கள அமைச்சர் சம்பிக்கா ரணவகா என்பவர் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
இலங்கைக் குடியரசுத் தலைவர் இராசபக்சேயிலிருந்து அவருடைய அமைச்சர்கள் வரை அனைவருமே உச்சக்கட்ட இனவெறியுடன் தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்கள். இந்தப் போக்கினை அவர்கள் ஒருபோதும் மாற்றிக்கொள்ளப் போவதில்லை. எந்தச் சூழ்நிலையிலும் இந்திய அரசு தங்களுக்குத் துணையாக நிற்கும் என்பதை அவர்கள் நன்கு உணர்ந்திருக்கிற காரணத்தினால் மேலும் மேலும் தமிழர்களுக்கு எதிராகப் பேசவும் செயல்படவும் துணிந்திருக்கிறார்கள். இந்த நிலைமையில் இந்திய அரசிடம் முறையிடுவதினால் எந்தப் பயனும் விளையப்போவதில்லை.
மாறாக தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் மட்டுமல்ல உலகமெல்லாம் உள்ளத் தமிழர்கள் ஒற்றுமையுடன் ஐ.நா. பேரவை இப்பிரச்சினையில் தலையிட வேண்டும் என வற்புறுத்துவதோடு எஞ்சியிருக்கும் ஈழத் தமிழர்களைப் பாதுகாக்க ஐ.நா. படையை அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துப் போராடியாக வேண்டும். இதைத் தவிர தமிழர்களைப் பாதுகாக்க வேறுவழியில்லை.
|