உலகில் 4.40 கோடி அகதிகள்! தமிழர்களே அதிக நாடுகளில் தஞ்சம்! |
|
|
|
சனிக்கிழமை, 04 ஆகஸ்ட் 2012 16:23 |
உள்நாடுகளிலும், வெளிநாடுகளிலும் இடம் பெயர்ந்து தற்போது உலகம் முழுக்க 4.40 கோடி மக்கள் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர் என ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் அமையம் தெரிவித்துள்ளது
. கடந்த சூன் 20ஆம் திகதி சர்வதேச அகதிகள் தினம் நினைவு கூறப்பட்டது. உலகின் அதிக நாடுகளில் அகதிகளாக வாழும் ஒரே இனம் இலங்கைத் தமிழர்கள் என்று ஐ.நா.வின் சேவை அமைப்பான யுனிசெப் கூறியுள்ளது. உலகின் 54 நாடுகளில் இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக வாழ்கின்றார்கள். உலகில் உள்ள எல்லா நாடுகளிலும் பல்வேறு அரசியல் மற்றும் பொருளாதாரம், உள்நாட்டு போர் ஆகிய காரணங்களால் அங்கு வாழும் மக்கள் அகதிகளாக வெளியேறுகின்றனர். எந்த ஒரு நாட்டிலும் உள்நாட்டு குழப்பம் ஏற்படும்போதோ, இனக்கலவரம் ஏற்படும்போதோ முதலில் பாதிக்கப்படுவது அப்பாவி மக்கள்தான். இவர்கள் அகதிகளாக இடம்பெயருகின்றனர். அந்த வகையில் ஆப்பிரிக்க கண்டத்தில்தான் முதன் முதலாக சூன் 20ஆம் திகதி அகதிகள் தினமாக அனுசரிக்கப்பட்டது. ஆப்பிரிக்க கண்டங்களில் உள்ள நாடுகளில் சோமாலியா, எத்தியோபியா போன்ற நாடுகளில் பசி, பஞ்சம், பட்டினி போன்றவை தலைவிரித்தாடுகின்றன. சில நாடுகளில் உள்நாட்டுப்போர், பயங்கரவாதிகளின் தாக்குதல் போன்ற பல்வேறு காரணங்கள் அங்குள்ள மக்களை பக்கத்து நாடுகளுக்கு இடம்பெயர வைத்துள்ளது. இந்நிலையில் கடந்த 2000ம் ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி அன்று ஐ.நா. பொதுச்சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி பல்வேறு காரணங்களால் இடம்பெயரும் மக்களுக்கு அகதிகள் அந்தஸ்து வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தான் ஐ.நா.வின் மனித உரிமை அமைப்பு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சூன் 26ஆம் தேதி சர்வதேச அகதிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. |