22-7-12 அன்று ஞாயிறு மாலை ஆயக்காரன்புலத்தில் பிரபாகரன்-தமிழர் எழுச்சி வடிவம் நூல் அறிமுக விழா ம.அ. முப்பால் தலைமையில் நடைபெற்றது.
பொ. பாண்டியன் வரவேற்புரை நிகழ்த்தினார். ம.தி.மு.க.வைச் சேர்ந்த வந்தியத் தேவன் நூல் அறிமுக உரையாற்றினார். ந. வைகரை, அ. நல்லதுரை, சி. முருகேசன், கா. பரந்தாமன் ஆகியோர் கருத்துரை வழங்கி னார்கள். பழ. நெடுமாறன் ஏற்புரை நிகழ்த்தினார். மரைக்காட்டுசுசே நன்றியுரை கூறினார். துபாயில் தமிழக மீனவர் படுகொலை நிலைமையை ஆராய தமிழக தூதுக்குழுவை அனுப்பும்படி முதல்வருக்கு பழ. நெடுமாறன் வேண்டுகோள் துபாய் அருகே கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் நான்கு பேர்கள் மீது அமெரிக்கக் கடற்படைக் கப்பல் ஒன்றில் இருந்த பாதுகாப்புப் படையினர் சுட்டதின் விளைவாக இராமநாதபுரம் பெரிய பட்டணத்தைச் சேர்ந்த ஏ. சேகர் என்பவர் அந்த இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார் மற்றும் மூவர் படுகாயமடைந்திருக்கிறார்கள். தமிழக கடல் பகுதியில் மீன்பிடிக்கும் மீனவர்களைச் சிங்களக் கடற்படை தொடர்ந்து கொன்று குவிக்கிறது. இப்போது பல்வேறு கடற்பகுதிகளிலும் தமிழக மீனவர்கள் சுடப்படும் நிகழ்ச்சிகள் அதிர்ச்சித் தருகின்றன. ஏற்கெனவே கொச்சி கடல் பகுதியில் கடந்த பிப்ரவரியில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவரான அஜீஸ்பின்கோ மற்றும் கேரளத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவரும் மீன் பிடித்துக்கொண்டிருக்கும் போது இத்தாலியக் கப்பலின் பாதுகாப்புப் படையினர் அவர்களைச் சுட்டனர் இதன் விளைவாக உயிரிழந்த இருவரின் குடும்பங்களுக்கும் இத்தாலிய கப்பல் நிறுவனத்திடமிருந்து நட்டஈடு பெற்று உடனடியாக இந்திய அரசு தந்தது. இத்தாலியக் கப்பலும் முடக்கப்பட்டது. வழக்கும் நடைபெற்று வருகிறது. அதைப் போல இப்போதும் துபாய் கடல் பகுதியில் உயிரிழந்த சேகரின் குடும்பத்தினருக்கும் படுகாயமடைந்த மற்றும் மூவருக்கும் அமெரிக்கக் கடற்படையிடமிருந்து உரிய நட்டஈட்டினை பெற்றுக்கொடுக்க இந்திய அரசு முன் வரவேண்டும் என வலியுறுத்துகிறேன். இப்பிரச்சினைக் குறித்து பிரதமருக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியிருப்பதை வரவேற்கிறேன். அத்துடன் இல்லாமல் உடனடியாகத் தமிழக அமைச்சர் ஒருவர் தலைமையில் ஒரு குழுவை துபாய்க்கு அனுப்பி அங்கு மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருக்கும் பல்லாயிரக்கணக்கானத் தமிழர்களின் நிலை குறித்து ஆராய்ந்து தமிழக அரசுக்கு அறிக்கை அளிக்கவும் அந்த அறிக்கையின்படி துபாயில் வாழும் தமிழக மீனவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி தமிழக முதல்வரை வேண்டிக்கொள்கிறேன். |