தமிழ்த்துறைக்கு தலைவராக உருது பேராசிரியர்! |
|
|
|
திங்கட்கிழமை, 03 செப்டம்பர் 2012 13:11 |
சென்னைப் பல்கலைக் கழக தமிழ்த்துறையின் தலைவராக இருந்த பேரா. முனைவர் அரசு அவர்கள் விடுப்பில் இருப்பதால். அவர் பேராசிரியராகப் பொறுப்பு வகித்த காலத்தில்
தமிழ் இலக்கியத்துறையின் பொறுப்பையும் ஏற்று நடத்தினார். இப்போது அவருக்குப் பதிலாக புதியவர்கள் யாரும் நியமிக்கப்படாத நிலையில் தற்காலிகமாக தமிழ் இலக்கியத்துறையின் தலைமைப் பொறுப்பு உருதுப் பேராசிரியரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தமிழ்த்துறையிலேயே பல தமிழறிஞர்கள் பணியாற்றி வருகிறார்கள். அவர்களில் யார் மூத்தவரோ அவரிடம் தற்காலிகமாக இப்பொறுப்பை ஒப்படைத்திருக்க வேண்டும். ஆனால் அதற்குப் பதில் தமிழுக்குக் கொஞ்சமும் தொடர்பில்லாத உருதுமொழிப் பேராசிரியரான சையத்சஜத் ஹூசேன் என்பவரை இப்பொறுப்பிற்கு நியமித்திருப்பதைக் கண்டு தமிழர்கள் அதிர்ச்சியடைந்து உள்ளனர். வேறு எந்த மொழித்துறைக்காவது இதைப்போல பிறமொழிப் பேராசிரியர் யாராவது நியமிக்கப்பட்டிருந்தால் அவர்கள் கொதித்துப் போராடியிருப்பார்கள். தமிழ் என்றாலே ஏளனமாகக் கருதப்படுகிற நிலையே இதற்குக் காரணமாகும். இதற்கெதிராக தமிழறிஞர்கள் குரல் கொடுக்க வேண்டும். |