"புதிய பார்வை' இதழின் ஆசிரியர் முனைவர் ம. நடராசன் அவர்களின் 70ஆவது ஆண்டு பிறந்த நாள் விழா 23-10-12 அன்று சென்னை, பெரியார் திடலில் காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரை சிறப்பாக நடை பெற்றது.
காலையில் திருபுவனம் திரு. ஆத்மநாபன் குழுவினரின் தமிழிசையுடன் விழா தொடங்கியது. நூற்றாண்டு கண்ட திராவிட இயக்கம் என்னும் தலைப்பில் நடைபெற்ற கருத்த ரங்கிற்கு வே. ஆனைமுத்து தலைமை தாங்கினார். கோ. இளவழகன் வரவேற்புரை வழங்கினார். க. திருநாவுக்கரசு, வி. விடுதலைவேந்தன். கு. திருமாறன், வளர்மதி, பொன்னீலன், ம. இரா.அரசு, மு. இராமசாமி, ந.செந்தலைக் கெளதமன், அமுதவன் ஆகியோர் கருத்துரை வழங்கினர். பிற்பகல் 3 மணிக்கு "இந்த இதயம் துடிப்பது' என்ற தலைப்பில் நடைபெற்ற கவியரங்கத்தில் கம்பம் பாரதன் தலைமை தாங்கினார். கவிஞர் சினேகன் முன்னிலை வகித்தார். கவிஞர்கள் நந்தலாலா, கிருதியா, இளைய கம்பன், தமிழமுதன், தஞ்சை இனியன் ஆகியோர் கவிதைகள் படித்தார்கள். மாலை 4 மணி முதல் 6 மணி வரை இலட்சுமன் சுருதி இசை நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை 6.15 மணிக்கு தொடங்கிய நிறைவு விழாவிற்கு பழ. நெடுமாறன் தலைமை தாங்கினார். நிக்கலஸ் லா, மெர்லின் கேலியாட், எலிசாபுலிவர்த்தி, கிருஷ்ணமோகன், அருண் சக்கரபர்த்தி, கிங்ஸ்லே நிக்வோயலா, மூர்த்தி, உசையர், எஸ். குலாம், எல். கோவிந்தராஜ், முனைவர் பொற்கோ, முனைவர் வி. சுந்தரமூர்த்தி, பேரா. இராமமூர்த்தி, கவிஞர் காசி.ஆனந்தன், எஸ்.ஏ. சின்னச்சாமி, மது.ச. விமலானந்தன், இரா. கலிய பெருமாள், வீரசந்தானம் உட்படப் பலர் வாழ்த்துரை வழங்கினர். முனைவர் ம. நடராசன் ஏற்புரை நிகழ்த்தினார். பேரா. சா.சு. இராமர் இளங்கோ நன்றியுரை ஆற்றினார். |