தமிழ்ப் பல்கலைக் கழகத்திற்குப் புத்துயிர் கொடு! சென்னையில் தமிழறிஞர்கள் உண்ணாப் போராட்டம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 05 நவம்பர் 2012 16:22
தமிழ்ப் பல்கலைக் கழக வளாகத்திற்குள் முதன்மையான கட்டடங்கள் அமைந்துள்ள பகுதிக்கு அருகே தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்கள் கட்ட 62 ஏக்கர் நிலத்தை எடுத்துள்ளது தமிழக அரசு.
ஏற்கெனவே நடுவணரசின் தென்னகப் பண்பாட்டு நடுவத்திற்கு அதே வளாகத்தில் 26 ஏக்கர் நிலம் எடுக்கப்பட்டது. 1995ஆம் ஆண்டில் 8ஆவது உலகத் தமிழ் மாநாடு நடைபெற்றபோது அதற்கு வரும் பேராளர்கள் தங்குவதற்காக 50 ஏக்கர் நிலம் எடுக்கப்பட்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
ஆக இதுவரை பல்கலைக் கழகத்திற்குச் சொந்தமான 1000 ஏக்கர் நிலத்தில் 138 ஏக்கர் நிலம் பறிக்கப்பட்டு பல்வேறு அரசு அலுவலகங்கள் அமைப்பதற்கு வழங்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் இதைப்போல இன்னும் எத்தனை நிலப்பறிப்பு நடைபெறப்போகிறதோ தெரியவில்லை.
உலகத் தமிழர்களின் கனவுத் திட்டமான தமிழ்ப் பல்கலைக் கழகத்தை மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர். அமைத்தார். அதற்கு 1000 ஏக்கர் நிலத்தையும் ஒதுக்கித் தந்தார். ஆனால் என்ன நோக்கத்திற்காக இப்பல்கலைக் கழகம் அமைக்கப்பட்டது என்பதையே மறந்து அதனுடைய வளர்ச்சிக்காக உதவுவதற்குப் பதில் அதைச் சீரழிக்கும் நடவடிக்கைகளில் தமிழக அரசு ஈடுபட்டிருப்பது மிக வருந்தத்தக்கதாகும்.
தமிழ்ப் பல்கலைக் கழகத்திற்கு மேலும் இடங்களை கொடுத்து அப்பல்கலைக் கழகத்தைப் பாதுகாக்கப் போராட வேண்டும் என தமிழ்ப் பல்கலைக் கழகப் பாதுகாப்பு இயக்கமும் தமிழ் வளர்ச்சிப் பாதுகாப்பு இயக்கமும் இணைந்து கடந்த 15-10-12 அன்று காலை 8 மணி முதல் 6 மணி வரை உண்ணாப் போராட்டத்தை நடத்தினர். இப்போராட்டத்திற்கு முது முனைவர் இரா. இளங்குமரனார் தலைமை தாங்கினார். சென்னைப் பல்கலைக் கழகத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர் பொற்கோ முன்னிலை வகித்தார். சூ. கலைச்செல்வன் அனைவரையும் வரவேற்றார். போராட்டத்தை மூத்த தலைவர் இரா. நல்லகண்ணு தொடக்கிவைத்தார்.
பழ. நெடுமாறன், சீமான், மல்லை சத்யா, து. இரவிக்குமார், பெ. மணியரசன், மா. நன்னன், புலவர் இறைக்குருவனார், தமிழ்நேயன், கு. திருமாறன், கு. முருகேசன், திருமுருகன் காந்தி, தா. வெள்ளையன், குடந்தை அரசன், கி.த. பச்சையப்பன், புகழேந்தி தங்கராசு, சா. ரஜினிகாந்த், பிரின்சு கஜேந்திரபாபு உள்ளிட்ட பலர் வாழ்த்துரை வழங்கினர். ம
 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.