சுடாதே - மானத்தைக் கெடு கோத்தபாயே வகுக்கும் திட்டம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 18 பெப்ரவரி 2013 14:09
நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரைச் சுட்டுக்கொன்றால், அது பெரிய பிரச்சனையாகிவிடும். பல நாடுகள் கேள்வி கேட்கும். அதுவும் மார்ச் மாதம் ஜெனீவா அமர்வுகள் வர இருக்கும்வேளையில் இவ்வாறு செய்யமுடியாது என்று, முடிவுகட்டியுள்ள பாதுகாப்பு அமைச்சு வேறு வழிகளில் தற்போது இறங்கியுள்ளது.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் எம்.பி சிறீதரன் அவர்களின், செல்வாக்கு நாளுக்கு நாள் பெருகிவருகிறது. அதுமட்டுமல்லாது தற்போது தடுத்துவைக்கப்பட்டுள்ள பல்கலைக் கழக மாணவர்களை விடுவிக்க, நீதிமன்றத்தின் உதவியை நாடவேண்டும் என்றும் கூறிவந்தவர் இவரே. அவ்வாறு அவர் நீதிமன்றம் சென்று மாணவர்களை வெளியே எடுத்தால், அம் மாணவர்கள் 2013ம் ஆண்டும் நவம்பர் மாதம் 27ம் திகதி மீண்டும் மாவீரர் தினத்தை யாழில் கொண்டாடுவார்கள். பயம் என்பது இல்லாது போகும் என்று அரச தரப்பு ஆலோசனை நடத்தியுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.
இதனால் எம்.பி சிறீதரனுக்கு ஆலோசனை வழங்கிவரும் அவரது தனிச் செயலாளர் பொன்காந்தனை இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் கைதுசெய்துள்ளார்கள். அடிக்கடி சிறீதரன் அவர்களின் அலுவலகம் சென்று அங்கே நடைபெறும் விடயங்களை இலங்கை புலனாய்வுப் பிரிவினர், ஆராய்ந்து வருவதோடு அங்கே உள்ள பொருட்களையும் எடுத்துச் செல்கின்றனர். இவை அனைத்துமே நன்கு திட்டமிடப்பட்டே நடந்தேறி வருகிறது. அதுமட்டுமல்லாது, சிறீரீதரன் அவர்களின் மானத்தை வாங்கவும், அவரை சமூகத்தின் மத்தியில் தரக்குறைவான ஒரு ஆளாகவும் காட்ட இலங்கை அரசு முயற்சி செய்துவருகிறது.
 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.