இலங்கையில் நடைபெறும் தமிழ் இனப்படுகொலைக்கு முக்கியமாக பதில் சொல்ல வேண்டிய நாடு பிரித்தானியா. சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றத்தில் முக்கியமாக கொண்டுவரப்பட வேண்டியவர்கள் பிரித்தானிய அரசே.
2013ம் ஆண்டு கொமன்வெல்த் நாடுகளின் கூட்டத்தொடர் சிறிலங்காவில் நடைபெற இருக்கும் நிலையில், அந்த கூட்டத்தொடர் சிறிலங்காவில் நடத்தக்கூடாது என்று பல பகுதிகளிலும் இருந்து குரல் எழுப்பட்டுவருகின்றன. இந்நிலையில், கனடா அரசு வெளிப்படையாக இந்த கூட்டத்தை கனடா அரசு பகிஷ்கரிக்கும், என்று கூறியுள்ளது. பிரித்தானியாவின் பிரதமர் டேவிட் கமேரோன் தாம் இந்த கூட்டத்தில் பங்கு பற்றுவோம் என்றும், தீர்மானித்த படி கொமன்வெல்த் நாடுகளின் சிறிலங்காவில் நடைபெறும் என்றும் வயுறுத்தினார். இந்த நிலையில், இன்று இருக்கும் மிகப்பெரிய கேள்வி, சிறிலங்காவில் நடைபெற்ற, நடைபெற்றுக் கொண்டிருக்கும் இனப்படுகொலைக்கு முக்கிய காரண கருத்தாக்கள்யார்? உலகத்தின் பெரும் பகுதியை தமது காலனித்துவதற்குள் கொண்டு வந்த பிரித்தானிய தமது நலனுக்கு ஏற்ப அந்த நாடுகளின் எல்லைகளை ஏற்படுத்தி புத்துப்புது நாடுகளை உருவாக்கினர். சிறு சிறு அரசுகள் ஆக இருந்த இந்தியாவை ஒரே நாடாக்கி பல மொழிகள் பேசும் மக்களின் உரிமைகளை பறித்து, அந்த நாட்டின் ஆட்சியை ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தின் கையிலேயே கொடுத்து விட்டுசென்றனர். இன்று இந்தியாவிலும் பல இன மக்கள் தமது விடுதலைக்காக போராடிக்கொண்டு நிற்கின்றனர். இந்தியாவில் வட எல்லையில் சீனா தனது எல்லையை வயுறுத்திக் கொண்டிருக்கிறது. இதில் முக்கியமான விடயம் ஒன்றை குறிப்பிட வேண்டும். உலகில் மிகவும் பழமை வாய்ந்த எழு மொழிகளில் உயிருடன் இருக்கும் மொழிகள் தமிழும் சீன மொழியும், சீன குடியரசும் பிரித்தானியாவில் இருந்த காலமும் இருந்தது). அதே போல் பிரித்தானிய மூன்று இராட்சியங்களாக இருந்த இலங்கை தமது சொந்த நலனுக்காக ஒரே இராட்சியத்திற்குள் கொண்டு வந்தனர். காலனித்துவ ஆட்சிகள் இரண்டாம் உலகப் போருக்கு பின் முடிவிற்கு வந்ததும், தாம் உருவாக்கிய புதிய நாடுகளை, அதில் வாழும் மக்களின் கருத்துகளை கேட்காமல் சுதந்திரம் அளித்துவிட்டு சென்றனர், அன்றில் இருந்து இன அழிப்புகளுக்கு வழிகளை உருவாக்கி விட்டும் சென்றனர். ஐக்கிய நாடுகள் சபையில் காலனித்துவத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு, மக்களுக்கு மறு நிவாரணம் அளிக்க வேண்டும் என்ற ஒரு தீர்மானம் வந்தபோது பிரித்தானிய தனது காலனித்துவத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளை அந்த தீர்மான வரைக்குள் கொண்டு வரவில்லை. சிறிலங்காவில் சிங்கள இனம் தமிழ் மக்கள் மேல் தமது ஆதிக்கத்தை செலுத்திய போதும், தமது தேவைக்காக சிறிலங்காவில் குடியேற்றப்பட்ட எமது தாயக தமிழர்களில் குடியுரிமை பறிக்கப்பட்ட போதும், வெறும் பார்வையாளர்களாகவே இருத்தனர். அதன் பின் தமிழர்களுக்கு எதிராக சிறிலங்கா அரசு நடாத்திய இனக்கலவரங்களின் போதும், அமைதியாக தமிழர்கள் அழிக்கப்படுவதை பார்வையாளர்களாக பார்த்துக் கொண்டு இருந்த பிரித்தானிய, தமிழர்கள் தம்மை பாதுகாக்க ஆயுதம் ஏந்திய போது, சிறிலங்கா அரசுக்கு ஆயுதம் விற்றதோடு, தமிழீழ விடுதலை புகளை பயங்கரவாத அமைப்பாக பிரித்தானியாவில் தடை விதித்தது. ஐக்கிய நாடுகள் சமையில் பாதுகாப்பு சபையில் அகத்துவ நாடாகிய பிரித்தானிய, பிரித்தானியவின் ஆட்சிக்குள் இருந்த நாடுகளில் இன அழிப்புகள் நடைபெற்ற போதும் பார்வையாளர்களாகவே இருந்தனர். இதில் முக்கியமாக பார்க்க வேண்டியது, 2002ல் சமாதான பேச்சுவார்த்தை, தமிழீழ பிரதேசங்களின் பெரும் பகுதியை தமது ஆட்சிக்குள் கொண்டு வந்து, உள்நாட்டு, வெளிநாட்டு கொள்கையுடன், தமிழீழ எல்லைகள் தீர்மானிக்கப்பட்டு தமிழீழ இடைகால அரசை நடைமுறையில் நடாத்திக்கொண்டிருத்த தமிழீழ விடுதலைப் புகளுக்கும் சிறிலங்கா சிங்கள அரசுக்கும் இடையே பேச்சு வார்த்தை தொடக்கி நடைமுறையில் இருந்த போது பிரித்தானியா, சிறிலங்கா அரசுக்கு நவீன ஆயுதங்களையும், இராணுவத்திட்க்கு பயிற்சியும் அளித்ததையும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த பேச்சுவார்த்தை நடைபெற்று கொண்டிருந்த நேரத்தில், ஐரோப்பிய யூனியனின் தலைமையை ஏற்று இருந்த டோனி பிளார் தலைமையில் இருந்த பிரித்தானிய அரசு, ஐரோப்பிய யூனியனில் புதிதாக சேர்ந்த பலை சோவித் யூனியனில் (ரசியா) இருந்த நாடுகளின் உதவியை கொண்டு பேச்சு வார்த்தையில் இருந்த ஒரு அமைப்பின் மேல் (தமிழீழ விடுதலை புகள்), ஐரோப்பிய யூனியனில், பயங்கரவாத அமைப்பாக தடை விதித்தது, அத்துடன் பிருத்தானிய, அமெரிக்க சார்பு நாடுகளாக இருந்த இந்த கிழக்கு ஐரோப்பிய நாடுகள் சிறிலங்கா அரசுக்கு நவீன ஆயுதங்களையும் வழங்கினர். அடுத்து தமிழ் இனப்படுகொலை நடைபெற்றுக் கொண்டு இருந்த உச்சக்கட்டத்தில், ஏப்ரல் 2009யில் சர்வதேச இராணுவத் தளபதிகள் சிறிலங்கா அரசின் இராணுவத் தளபதிகளுடன் வவுனியாவில் சந்திப்பு ஒன்று நடைபெற்றது. அந்த சந்திப்பின் போதும் பிரித்தானிய இராணுவத் தளபதியும், அமெரிக்க இராணுவத் தளபதியும் அந்த இடத்தில் இருந்தனர். சிறிலங்காவில் இனப்படுகொலை நடை பெற்றுக்கொண்டிருக்கும் போது இவர்கள் பார்வையிட சென்றார்களா? தமிழ் இனப்படுகொலைக்கு சிறிலங்கா அரசுடன் துணை நின்ற நாடுகளில் பிரித்தானிய முகியமானது. தமிழ் மக்களின் அழிவுக்கும் இவர்களின் பங்கு நிறையவே உள்ளது. கொமன்வெல்த் நாடுகள், பிரித்தானியாவின் காலனித்துவத்தில் இருந்த நாடுகளே முக்கிய பங்கு வகிக்கின்றனர். 3 இலட்சம் தமிழர்கள் இடம்பெயர்ந்து வாழும் கனடா நாட்டின் அரசும், அத்தனை கட்சிகளும் தமிழருக்கு நடந்தது ஒரு இனப்படுகொலை, சிறிலங்கா அரசு தடை செய்யப்பட வேண்டும், தமிழர்களுக்கு நியாமமான தீர்வு வேண்டும் என்று கூறி இருக்கும் நிலையில், 3 இலட்சம் தமிழர்கள் வாழும் பிரித்தானியாவில் என்ன நடக்கிறது? முள்ளிவாய்க்கால் மக்கள் அங்கே நடைமுறையில் இருந்த ஒரு நாட்டை பாதுகாக்கவே போராடினார்கள். தமிழ் மக்களின் கடமை அந்த நடைமுறையில் இருந்த அரசை மீள் நிலை நாட்டுவதே முள்ளிவாய்க்கால் வரை அதை மண்ணிற்காக, அந்த நாட்டிற்காக உயிர் நீத்தவர்களுக்கு நாம் செய்யும் நீதி. அதை புரிந்து கொண்டு, இன்று பிரித்தானிய தமிழ் மக்கள் ஒரு முக்கிய காலக்கட்டத்தில் வாழ்த்து கொண்டிருக்கிறார்கள். ஈழத்தமிழர்களின் இன்றைய நிலைக்கு முக்கிய காரணம் பிரித்தானிய அரசே! இதை கவனத்தில் கொண்டு மிகவும் மன வமையுடன் போராடுவதே தமிழீழ விடுதலைக்கு உங்களால் செய்யக்கூடிய போராட்டம். - ஈழத்து நிலவன் |