"தமிழ் வழிபாட்டு முறைக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்தவர் கி. பழநியப்பனார்'' என, பேரூர் ஆதீனம் இளைய பட்டம் மருதாசல அடிகளார் புகழ்ந்தார் PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 16 ஜூலை 2013 13:34

கி. பழநியப்பனாரின் இறைத் தொண்டு குறித்த கருத்தரங்கில், தலைமை வகித்து அவர் மேலும் பேசியது: தமிழ் மொழி உணர்வு தாழ்வுறும் போதெல்லாம் அருளாளர்கள் வந்து அதை ஏற்றம் பெறச் செய்துள்ளனர். வாழ்வியல் தமிழுக்கு குன்றக்குடி அடிகளார் சிறப்பாக பணியாற்றினார். அதன்

பயனாக, தமிழகத்தில் தமிழில் அர்ச்சனை செய்ய வழி பிறந்தது. மேலும், மலர் வழிபாட்டு முறை உருவானது. இது தமிழகம் முழுவதும் பரவுவதற்கு காரணமாக இருந்தவர் பழநியப்பனார்.

maruthasalaadikalar
தமிழக முதல்வராக இருந்த பக்தவத்சலத்தை மதுரைக்கு அழைத்து வந்து மலர் வழிபாட்டை நடத்தினார். திருக்கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய எதிர்ப்பு எழுந்தபோது, அதற்கெதிராக போராடி தமிழில் அர்ச்சனை செய்யும் நிலையை உறுதி செய்தவர். கோயில்களில் ஓதுவார்கள் மூலம் தேவாரம் பாடப்படும் முறை ஏற்றம் பெறுவதற்கும், சமயங்கள் இடையே நல்­ணக்கம் உருவாகவும், சமய உணர்வுகள் வளரவும் காரணமாக இருந்தார். இலக்கியங்களில் முன்னோடியாக இருக்கும் திருமுருகாற்றுப்படை மதுரையுடன் தொடர்புடையது. 6 ஆவது படை வீடான பழமுதிர்சோலை எங்கே, எப்படி இருக்கிறது என்பது தொடர்பான பல்வேறு கருத்துகள் நிலவியபோது, அதற்கு புத்தாக்கம் கொடுத்து 6 ஆவது படைவீட்டை உருவாக்கிய பெருமை பழநியப்பனாரையே சாரும்.
சிறீ என்பதை திரு என்று மாற்றவும், பெயர்களை தமிழில் வைக்கவும் வ­யுறுத்தியவர் என்றார் அடிகளார்.

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.