தலைமுறையாகத் தொடரும் தமிழ்த் தொண்டு PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 16 ஜூலை 2013 13:58

அறநெறியண்ணலின் நூற்றாண்டு விழாவிற்கு வந்தவர்கள் அனைவரையும் அவருடைய கொள்ளுப் பேரன் ஜெ. வேங்கட ரமணன் - கொள்ளுப் பேத்தி மகாலட்சுமி மற்றும் குடும்பத்தினர் வரவேற்றனர்.

set-01

நிகழ்வில் அவருடைய பேரர்கள் வரவேற்புரையும் நன்றியுரையும் நிகழ்த்தினார்கள். விழாவின் தொடக்கத்தில் அவரின் கொள்ளுப் பேத்தி இ. மதுமிதா பார்வதி, கொள்ளுப் பேரன் ப. கிருட்டிணன் ஆகியோர் இறைவணக்கம் பாடினார்கள்.
விழாவிற்கு வந்த அனைவரையும் பேரன் நெ. பழநிக்குமணன் வரவேற்று உரையாற்றினார். திருக்குறள் தொண்டு பற்றிய கருத்தரங்கிற்கு வந்துள்ளோரை பேரன் கோ. வெற்றிவேல் வரவேற்றுப் பேசினார்.
இறைத் தொண்டு பற்றிய கருத்தரங்கில் கலந்து கொண்டோர்களை பேரன் நெ. இனிய கிருட்டிணன் வரவேற்றார்.
தமிழ்த் தொண்டு குறித்த கருத்தரங்கில் உரையாற்றியோருக்கு பேரன்
நெ. அமுதன் பிரமநாயகம் நன்றி கூறினார்.
பொதுக் கருத்தரங்கில் கலந்து கொண்ட அனைவரையும் பேரன்
மரு. மா. பழநியப்பன் வரவேற்றார். இறுதியாக பேரன் ஆ. பழநியப்பன் நன்றி கூறினார்.

 
காப்புரிமை © 2022 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.