பொடாவில் சுப.வீரபாண்டியனும் கைது PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 16 ஆகஸ்ட் 2002 20:25
சுப.வீரபாண்டியன் பொடா சட்டத்தின் கீழ் ஆக.16 அன்று கைது செய்யப்பட்டார்.

சென்னை ஆழ்வார் திருநகரில் உள்ள அவரது இல்லத்தில் காலை 6 மணிக்கு கியூ பிரிவு போலீசார் அவரை கைது செய்தனர்.

பூந்தமல்லியில் உள்ள பொடா சிறப்பு நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டு, சென்னை மத்திய சிறையில் வரும் செப்,13 வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

பிறகு, அவரது வீட்டில் கியூ பிரிவு போலீஸார் பகல் 2.15 மணி முதல் 3.45 மணி வரை சோதனை நடத்தி, பிரபாகரனின் அட்டைப் படம் வெளியான எரிமலை, சிந்தனையாளன் ஆகிய இதழ்களை அங்கிருந்து எடுத்து ச் சென்றனர்.

கைதான பிறகு பூந்தமல்லி பொடா சிறப்பு நீதிமன்றத்தில் நிருபர்களிடம் சுப. வீரபாண்டியன் கூறியதாவது.

தமிழகத்தில் நிலவி வரும் பசி, பட்டினி போன்ற பிரச்சினைகளைத் திசைதிருப்பவே இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுகின்றன.

தமிழ்நாட்டில், தமிழ் தேசவிரோதமாகக் கருதப்படுகிறது. தமிழை ஆதரிப்பவர்கள், தமிழகத்தில் தேச விரோதிகளாகச் சித்தரிக்கப் படுகிறார்கள்.

தமிழகத்தில் நடப்பது ஜெயலலிதா ஆட்சியா, சந்திரிகா ஆட்சியா என்ற சந்தேகம் ஏற்படுகிறது. காலம் இதற்கு விடைச் சொல்லும், வரலாறு எங்களை விடுதலை செய்யும்.
 
காப்புரிமை © 2022 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.