கவிதை : பாருக்குள்ளே நல்ல நாடு - கவிக்கோ அப்துல் ரகுமான் |
|
|
|
வெள்ளிக்கிழமை, 16 ஆகஸ்ட் 2002 20:29 |
அவர்களைச் சிறையில் சந்தித்தேன். "என்ன குற்றம் செய்தீர்கள்? " என்று கேட்டேன் ஒவ்வொருவராகச் சொன்னார்கள் :
"எங்கள் வீட்டில் திருடிக் கொண்டு ஒருவன் ஓடினான். "திருடன், திருடன்" என்று கத்தினேன். அமைதிக்குப் பங்கம் விளைவித்ததாக என்னைக் கைது செய்துவிட்டார்கள்." "என் வயலுக்கு வரப்பெடுத்துக் கொண்டிருந்தேன். பிரிவினைவாதி என்று பிடித்துக்கொண்டு வந்து விட்டார்கள். " "அதிகாரி லஞ்சம் வாங்கினான், தடுத்தேன். அரசுப் பணியாளரை அவருடைய கடமையைச் செய்யவிடாமல் தடுத்ததாகத் தண்டித்துவிட்டார்கள். " "அலிபாபாவும் நாற்பது திருடர்களும்ீ படச் சுவரொட்டியை ஒட்டிக்கொண்டிருந்தேன். சட்டமன்ற உறுப்பினர்களை அவதூறு செய்ததாக அழைத்துக்கொண்டு வந்து விட்டார்கள். " "சுதந்திர தின விழாவில் 'ஜன கண மண' பாடிக் கொண்டிருந்தார்கள். நான் பசியால் சுருண்டு படுத்துக்கொண்டிருந்தேன். எழுந்து நிற்க முடியவில்லை. தேசிய கீதத்தை அவமதித்ததாகச் சிறையில் அடைத்து விட்டார்கள். "
எப்போதோ கவிக்கோ எழுதிய கவிதை இப்போது பொடாவில் பொருந்துகின்றது |