முற்றத்தில் மாவீரர் நாள்! PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 16 டிசம்பர் 2013 12:31

தஞ்சையில் அமையப்பெற்றுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் பெருந்திரளான மக்கள் மத்தியில் மாவீரர்களுக்கான பொதுச்சுடரினை பழ.நெடுமாறன் அவர்கள் ஏற்றி மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தியுள்ளார்.

முள்ளிவாய்க்கால் முற்றத்தில் சிறப்புற மாவீரர் நாள் நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. காலை அரங்க நிகழ்வுகளில் முனைவர் நடராசன், சீமான், பழ.நெடுமாறன் உள்ளிட்ட முதன்மையானவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தியுள்ளார்கள்.

mutram

நவம்பர் 27 மாவீரர் தினம். உலகம் முழுவதும் உள்ள உணர்வாளர்கள் அனுசரிக்கும் நாள். இந்த நாளில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் பழ.நெடுமாறன் தலைமையில் மாவீரர் தின அரங்கக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஏராளமானோர் குடும்பம் குடும்பமாக வந்து கலந்து கொண்டனர்.

alt

விழாவில் நெடுமாறன் கருத்துத் தெரிவிக்கும் போது "முற்றத்தை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள். இது தமிழினத்தின் அவலத்தின் சின்னம். இந்த முற்றம் இனி போராளிகளை உருவாக்கும் பயிற்சிக் களமாக பாசறையாகச் செயல்படும்'' என்று கூறினார்.

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.