பிரபாகரனை நாடு கடத்த முயற்சியா? தமிழர்கள் கொதித்து எழுவார்கள் - டெலோ எச்சரிக்கை PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 01 ஆகஸ்ட் 2002 15:49

கொழும்பு, ஜúன் 25: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஈழத்தமிழ் இனத்தின் தலைவராக ஜனநாயக ரீதியாக அங்கீகரிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவரை நாடு கடத்த எவர் முயன்றாலும் அதனை எந்த விலை கொடுத்தேனும் எமது மக்கள் தடுத்து நிறுத்தியே தீர்வார்கள் என்று டெலோ இயக்கத்தின் முக்கிய பிரமுகரான என்.சிறீ காந்தா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை இந்தியாவுக்கு கொண்டுவர வேண்டுமென்று கோரியுள்ள அதே நேரம் இலங்கை இன நெருக்கடிக்குத் தீர்வாக சுயாட்சி தமிழ் மாநிலம் அமைவதையும் எதிர்த்து இந் தியத் தேசியக் காங்கிரஸ் கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள் ளது.

எந்தளவுக்கு ராஜீவ் காந்தியின் படுகொலை இந்தி யாவில் உணாச்சிப் பூர்வமான விடயமாக இருந்து கொண்டிருக்கிறதோ அதற்கு எந்த வகையிலும் குறையாத அளவில் பிரபாகரனை நாடு கடத் தும் கோரிக்கை இலங்கைத் தமிழினத்தைப் பொறுத்த மட்டில் மிகவும் உணர்ச்சிப் பூர்வமான விவகாரம் என் பதை இச் சந்தர்ப்பத்தில் தெளிவுபடுத்தியே தீரவேண் டும். இன்று விடுதலைப் புலிகளை இலங்கையின் இனப்பிரச்சினையில் தமி ழினத்தின் ஏகபிரதிநிதிகளாகக் கடந்தகாலக் கசப்புணர்வு களை மறந்து நாம் அனை வரும் ஏற்றுக் கொண்டுள் ளோம். இதற்கான அங்கீகார மும் எமது மக்களால் கடந்த நாடாளுமன்றப் பொதுத் தேர் தலில் உறுதியாக வழங்கப் பட்டுள்ளது. மேலும் எரிந்து கொண்டிருக்கும் இலங்கை யின் இனப்பிரச்சினையில் அமைதித் தீர்வுக்கான ஒரே வழி கடந்தகால வரலாறாகி விட்ட ராஜீவ்-- ஜயவர்த்தனா ஒப்பந்தம் அல்ல. மாறாக இலங்கையில் எம்மினத்தின் தனித்துவத்தையும் தாயகத் தையும் பிறப்புரிமையான சுயநிர்ணய உரிமையையும் அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்படக் கூடிய ஓர் சுயாட்சி அரசே என்பதை நாம் அழுத்தமாகத் தெரிவித்து கொள்ள விரும்புகிறோம். கலாச்சாரம் பண்பாடு மதம் என்பனவற்றின் அடிப்படை யில் வரலாற்று ரீதியாக எம் மினத்துடன் பின்னிப் பிணைந்த தொடர்புகளைக் கொண்டிருக்கும் இந்திய மக்கள் எமது உணர்வுகளை யும் அரசியல் நிலைப்பாட் டையும் நிச்சயமாகப் புரிந்து கொள்வர் என்றே நம்புகின் றோம்" என்றும் சிறீகாந்தா மேலும் தெரிந்துள்ளார்.

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.