வியாழக்கிழமை, 01 ஆகஸ்ட் 2002 16:02 |
யாழ்ப்பாணம், சூன் 18: யாழ்ப்பாணத்தைச் சுற்றியுள்ள தீவுப் பகுதிகளில் அரசியல் பணிகளைச் செய்வதற்கு விடுதலைப் புலிகளை அனுமதிக்க மறுத்த இராணுவம் இறுதியாக பணிந்துள்ளது. இந்தப் பிரச்சனையில் விடுதலைப் புலிகள் கடுமையான நிலையை மேற்கொண்டிருந்தனர்.
புரிந்துணர்வு உடன்பாட்டின்படி தங்களை அனுமதித்தே தீர வேண்டும் என்று வற்புறுத்தி னார்கள். கண்காணிப்புக் குழு புலிகளின் கோரிக்கையில் உள்ள நியாயத்தைச் சுட்டிக்காட்டி சிங்கள அரசை வற்புறுத்தியது. இதன் விளைவாகத் தீவுப் பகுதிக்குச் செல்வதற்கு விடுதலைப் புலிகள் அனுமதிக்கப்பட்டார்கள். விடுதலைப் புலிகளின் யாழ்; மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் இளம்பரிதி தலைமையில் 37 விடுதலைப் புலிகள் தீவுப் பகுதிகளுக்குச் சென்றுள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் கூடி அவர்களை வரவேற்று ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். பல இடங்களில் புலிகள் பொதுக் கூட்டங்களை நடத்தினார்கள். தீவுப் பகுதி மக்கள் அணி அணியாக இக்கூட்டங் களில் கலந்து கொண்டனர். |