தமிழ்த் தேசியர்களை இணைத்த பணியே வாழ்நாளில் சிறந்த பணியாகும்
அருமைத் தோழர்களே!
எனக்கு 81 வயது ஆகிறது. என்னுடைய வாழ்நாளில் பலவற்றை நான் சாதித்ததாக தோழர்கள் கூறுகின்றனர்.
1. பெருந்தலைவர் காமராசரால் "மாவீரன்'' எனப் பாராட்டப்பட்டேன்.
2. முன்னாள் பிரதமர் இந்திரா அம்மையாரின் உயிரைக் காப்பாற்றினேன்.
3. தர்மபுரியில் நக்சலைட் படுகொலைகளைத் தடுத்து நிறுத்தினேன்.
4. சந்தன வீரப்பன் பிடியிலிருந்து நடிகர் இராஜ்குமாரை மீட்டுவந்தேன்.
5. ஐந்து முறை தமிழீழம் சென்று அங்கு நடைபெற்ற விடுதலைப் போராட்டத்தைக் கண்டுவந்து உலகத் தமிழர்களுக்கு அறிவித்தேன். அந்தப் போராட்டத்திற்கு துணையாக இருந்தேன். தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் பெருநம்பிக்கைக்கும் பேரன்பிற்கும் உரியவனாகத் திகழ்ந்தேன். திகழ்கிறேன்.
6. 26 தமிழர்களின் உயிர் காத்தேன்.
ஆனால் இவையெல்லாவற்றையும்விட தமிழ்த் தேசியர்களை ஒன்றுபடுத்திய பணியையே எனது வாழ்நாளின் சிறந்த பணியாகக் கருதுகிறேன். என்மீது நீங்கள் வைத்திருக்கும் அளவற்ற நம்பிக்கை என்னை நெகிழச் செய்கிறது. அந்த நம்பிக்கைக்கு உகந்தவனாக என்றும் இருப்பேன்.
- இணைப்புக் கூட்டத்தில் பழ.நெடுமாறன் |