முற்றம் - பண்பாட்டு மையம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 17 செப்டம்பர் 2014 14:51

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் தமிழர் பண்பாட்டு மய்யமாகவும் திகழ்கிறது. இதற்காக அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் இலக்கிய முற்றத்தின் பணிகளை விளக்கி அதன் தலைவர் பேரா. பெ. இராமலிங்கம் அளித்த அறிக்கையின் முக்கியப் பகுதிகள் :


! முள்ளிவாய்க்கால் இலக்கிய முற்றத்தில் மொழிப் போர் ஈகியர் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. முனைவர் ம. நடராசன் தலைமையில் செந்தலை வ. கெளதமன் உரையாற்றினார்.

! 29-1-2014 அன்று முத்துக்குமார் நினைவேந்தல் நிகழ்ச்சியையொட்டி கட்டணமில்லா பல் மருத்துவ முகாம் நடத்தப்பட்டு பல நூற்றுக்கணக்கான மக்கள் பயன்பெற்றனர்.

2-2-14 ஞாயிறு அன்று காலை சிறுவர்-சிறுமியர்களுக்கான மாறுவேடப் போட்டியும் மாலையில் முள்ளிவாய்க்கால் இலக்கிய முற்ற தொடக்க விழாவும் நடைபெற்றன. விழாவிற்கு பழ.நெடுமாறன் தலைமை தாங்கினார். முனைவர் ம. நடராசன் தொடக்கி வைத்தார். அறிஞர் ப. அருளியார் சிறப்புரையாற்றினார்.

9-3-14 அன்று மாலை 4.30 மணிக்கு முனைவர் இரா. கலியபெருமாள் அவர்கள் "தமிழர் வீரம்' என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.

13-4-14 அன்று பேரா. மு. இளமுருகன் அவர்கள் "பாவேந்தரும் தமிழ்த்தேசியமும்' என்ற தலைப்பில் ஆய்வு உரை நிகழ்த்தினார்.

11-5-14 அன்று முனைவர் அ. தட்சிணாமூர்த்தி "தமிழ்க் காதல்' என்ற தலைப்பில் ஆய்வு உரை நிகழ்த்தினார்.

31-5-14 அன்று தில்லையாடி வள்ளியம்மை, அறிஞர் தனிநாயகம் அடிகள் ஆகிய இரு பெரும் தமிழர்களின் நூற்றாண்டு விழாக்கள் நடத்தப்பட்டன.

தில்லையாடி வள்ளியம்மை நூற்றாண்டு விழாவில் பேரா. பெ. இராமலிங்கம் வரவேற்புரையாற்ற, முனைவர் ம. நடராசன் தொடக்கி வைக்க, காந்தி கிராம பல்கழைக் கழக முன்னாள் துணைவேந்தர் ந. மார்கண்டன் அவர்கள் தலைமையில் தோழர் சி. மகேந்திரன் நினைவுரையாற்றினார். அன்று மாலையில் அறிஞர் தனிநாயகம் அடிகளின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. சி. முருகேசன் வரவேற்புரையாற்றினார். பழ. நெடுமாறன் தொடக்கி வைத்தார். முனைவர்

வீ. அரசு தலைமை தாங்க முனைவர் இரா. காமராசு சிறப்புரையாற்றினார்.

8-6-14 அன்று மாலை "மொழிப் போர் ஈகங்களும் மொழிக் கொள்கைகளும்' என்ற தலைப்பில் திரு. பெ. மணியரசன் சிறப்புரையாற்றினார்.

29-6-14 அன்று மாலையில் முற்றத்தில் யோகப் பயிற்சி வகுப்புகள் ஆசிரியர் சக்தி முருகேசன் அவர்களைக் கொண்டு தொடங்கப்பெற்றது.

13-7-14 அன்று இராஜேந்திர சோழர் பெருவேந்தனின் 1000 -ஆவது ஆட்சியாண்டு பெருவிழா மிகச்சிறப்பாக நடத்தப்பட்டது. இவ்விழாவில் கட்டணமில்லாத இசை, நடன வகுப்புகள் தொடக்கிவைக்கப்பட்டன. நடன ஆசிரியராக திருமதி அபிராமி அவர்களும் இசையாசிரியராக திருமதி விசயலக்குமி அவர்களும் பொறுப்பேற்றனர். இவ்விழாவிற்கு கோ. சண்முகவேல் தலைமை தாங்க பழ.நெடுமாறன் இசை, நடனப் பயிற்சி வகுப்புகளை தொடக்கிவைத்தார். அன்று மாலை 4 மணிக்கு "பெருவேந்தனின் பெருமிதங்கள்' என்ற தலைப்பில் நடைபெற்ற பாவரங்கிற்கு திரு. குழந்தைசாமி தலைமை தாங்கினார். ச. மல்லிகா, தாஜ்பால், தஞ்சை ஆழி செயலட்சுமி, கலையரசன் ஆகியோர் பங்கேற்றனர்.

சிறப்புக் கலையரங்கிற்கு புலவர் ந. கந்தசாமி தலைமை தாங்கினார். தொல்லியல் அறிஞர் குடவாயில் பாலசுப்பிரமணியம் சிறப்புரையாற்றினார். அத்துடன் படக்கருவி மூலம் இராசேந்திர சோழனின் படையெடுப்பு ஆட்சிமுறை போன்றவற்றை விளக்கினார்.

10-8-2014 அன்று திரு. ம. பொன்னிறைவன் தலைமையில் முனைவர் க. நெடுஞ்செழியன் அவர்கள் "உலகம் பரவிய சங்க இலக்கியங்கள்' என்னும் தலைப்பில் அரியதொரு ஆய்வுரை நிகழ்த்தினார்.

31-8-2014 ஞாயிறு மாலை 6 மணிக்கு பூங்குழலி தயாரித்த "தீ வரைவு' என்னும் ஆவணப்படம் திரையிடப்பட்டது.

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.