நடிகர் எஸ்.எஸ். இராஜேந்திரன் மறைவு - பழ. நெடுமாறன் இரங்கல் PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 05 நவம்பர் 2014 15:08

நடிகர் எஸ்.எஸ். இராஜேந்திரன் அவர்களின் மறைவு திரையுலகிற்கு பெரும் இழப்பாகும்.

சிறுவயதில் நாடகங்களில் நடித்து, பின்னர் திரையுலகில் அடியெடுத்து வைத்து மிக்க புகழ்பெற்றார். அவர் கொண்ட இலட்சியத்தில் இறுதிவரை உறுதியாக இருந்தார். இளம் வயதில் என்னை ஊக்குவித்து தென்பாண்டி வீரன் என்ற நாடகத்தை எழுத வைத்து அறிஞர் அண்ணா தலைமையில் அரங்கேறிய அந்த நாடகம் அவரால் தமிழகம் முழுவதிலும் நடிக்கப்பெற்றது.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

 
காப்புரிமை © 2022 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.